சத்தம் இல்லாமல் ரிங்கு சிங் செய்த கெத்து சாதனை.. தொடர்வதற்கும் வாய்ப்பு!

0
1462
Rinku

டி20 கிரிக்கெட் ரசிகர்களிடையே உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக உலகத்தின் எல்லா பெரிய அணிகளும் தங்களுடைய டி20 கிரிக்கெட் அணியை மிக வலிமை உடையதாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

ஏனென்றால், கிரிக்கெட்டை சுற்றி நடக்கும் மிகப்பெரிய வணிகம் டி20 கிரிக்கெட் மையப்படுத்தியே இருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு கிரிக்கெட் நாடுகளுக்கும் சிறந்த டி20 வீரர்கள் தேவைப்படுகிறார்கள். குறிப்பாக பெரிய நாடுகள் இதில் சமரசம் இல்லாமல் இருக்கின்றன.

- Advertisement -

இந்த வகையில் இங்கிலாந்து அணி முதன்முதலாக விழித்துக் கொண்டு தங்களுடைய டி20 அணியை ஆல் ரவுண்டர்களை வைத்து, பேட்டிங் நீளத்தை அதிகரித்து, தாக்குதல் பாணி கிரிக்கெட்டை விளையாடி, கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.

எனவே தற்பொழுது கிரிக்கெட்டின் பெரிய நாடுகள் தங்களுடைய டி20 கிரிக்கெட் அணியை எல்லா வகையிலும் வலிமையானதாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு பகுதிக்கும் சரியான வீரர்கள், அதேபோல் பந்துவீச்சிலும் மூன்று பகுதிக்கும் சரியான பந்துவீச்சாளர்கள் எனத் துல்லியமாக கட்டமைக்க விரும்புகிறார்கள்.

தற்போது இந்திய அணியின் டி20 பேட்டிங் யூனிட்டில் ஃபினிஷர் இடத்திற்கு முன்பு ஹர்திக் பாண்டியா இருந்து வந்தார். தற்பொழுது அந்த இடத்திற்கு இளம் வீரர் ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டு தயார்படுத்தப்பட்டு வருகிறார்.

- Advertisement -

ஆனால் அவர் இந்திய அணிக்குள் வந்த பொழுதே பினிஷர் இடத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதற்கான எல்லா திறமைகளையும் தகுதிகளையும் வைத்திருந்தார். இதுவரை அவர் மொத்தமாக பேட்டிங் செய்ய ஐந்து டி20 போட்டிகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. இந்த ஐந்து போட்டிகளிலும் அவர் மகத்தான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

ரிங்கு சிங் தான் பேட்டிங் செய்த முதல் ஐந்து சர்வதேச டி20 போட்டிகளில் 38, 37, 22, 31*, 46 என 20 ரன்கள் தாண்டி அடித்திருக்கிறார். மேலும் இதில் மூன்று முப்பது ரன்கள் ஒரு நாற்பது ரன்கள் அடக்கம்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எந்த இந்திய பேட்ஸ்மேன்களும் தங்களுடைய முதல் ஐந்து போட்டிகளில் 20 ரன்கள் தாண்டி அடித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் இவரது இந்தச் சாதனை இந்திய டி20 கிரிக்கெட் பதியப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த சாதனை நீள்வதற்கும் மிக அதிக வாய்ப்புகள் உண்டு. அப்படி நீளும் பொழுது உலகச் சாதனையாகவும் மாறும்!