209 ஸ்ட்ரைக் ரேட்ல நொறுக்கி இருக்கேன்.. ஆனா இந்த பவுலரை ஒன்னுமே செய்ய முடியல – அபிஷேக் ஷர்மா பேட்டி

0
6307
Abhishek

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக விளையாடும் இந்திய இளம் இடதுகை வீரர் அபிஷேக் ஷர்மா எல்லோரது கவனத்தையும் கவர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் தான் சந்தித்ததில் இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் யார் என்று கூறியிருக்கிறார்.

அபிஷேக் ஷர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 467 ரன்கள் குவித்திருக்கிறார். ஒருமுறை கூட அவர் 30 பந்துகளை தாண்டி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இன்னொரு ஆச்சரியப்படத்தக்க விஷயம் அவருடைய ஸ்டிரைக் ரேட் 209 ஆக இருக்கிறது.

- Advertisement -

இவர் களம் இறங்கும் ஒவ்வொரு முறையும் பவர் பிளேவை முழுமையாக பயன்படுத்தி விளையாடி ஹைதராபாத் அணிக்கு முன்னிலையை பெற்று தந்து விடுகிறார். மேலும் இவருக்கு எதிர் முனையில் இருக்கும் ஹெட் இவரைப் போலவே விளையாடக் கூடியவர். எனவே இந்த இரண்டு வீரர்களும் பவர் பிளே முடியும் வரை விளையாடினாலே ஆட்டம் ஹைதராபாத் பக்கத்தில் வந்து விடுகிறது.

இந்த நிலையில் ஹைதராபாத் அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய கடைசி ஆட்டத்தில் ஹெட் முதல் பந்தில் ஆட்டம் இழந்து விட்டார். ஆனால் அபிஷேக் சர்மா வெறும் 28 பந்துகளை மட்டும் சந்தித்து 66 ரன்களை அடித்து நொறுக்கி, மீண்டும் ஹைதராபாத் வெற்றி பெறுவதற்கான அருமையான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். 214 ரன்கள் துரத்தி ஹைதராபாத் வெற்றி பெற்றதோடு புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் தான் சந்தித்ததில் யார் கடினமான பந்துவீச்சாளர் என்று அவர் கூறும் பொழுது ” பும்ரா மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவருக்கு மற்றவர்களை விட கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் இருக்கிறது. மேலும் அவர் சிறந்த யார்க்கரை வீசுகிறார். மேலும் அவர் அடுத்து என்ன மாதிரியான பந்து வீசப் போகிறார் என்பது பேட்ஸ்மேன் கணிப்பது மிகவும் கடினம். எனவே பும்ரா தான் இந்த ஐபிஎல் தொடரில் நான் சந்தித்ததில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : என்னை டீம்ல செலக்ட் பண்ணல.. ஏன்னா நான் செலக்டர்ஸ் கால்ல விழல – கவுதம் கம்பீர் அதிரடியான பேட்டி

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் முதல் தகுதிச்சுற்றில் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. முழுமையாக பேட்டிங்கை நம்பி களமிறங்கும் இந்த அணி, இந்த முறை சாதிக்குமா? என்று பார்க்க வேண்டும்!