இந்திய கிரிக்கெட்

நான் 5 சிக்ஸ் அடிச்ச பிறகுதான் எனக்கு அது நடந்துச்சு.. என்னோட திட்டம் இப்போ இது மட்டுமே – ரிங்கு சிங் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஃபினிஷர் ஆன ரிங்கு சிங் தற்போது நடைபெற உள்ள விஜய் ஹசாரே டிராபியில் உத்தரப்பிரதேச அணிக்காக கேப்டனாக பொறுப்பேற்று உள்ளார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இவர் விளையாடும் ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

5 சிக்ஸ் அடித்த ரிங்கு சிங்

ரிங்கு சிங் கடந்த ஆண்டு குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இறுதிக்கட்டத்தில் 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக உலக மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். அந்த அதிரடி ஆட்டமே அவருக்கு இந்திய அணியில் இடம் பிடிக்க சிறந்த வழியாக அமைந்தது. மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அவரது பங்களிப்பு பெரிதாக இல்லை என்றாலும் அவரது திறமையை கருத்தில் கொண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை தக்க வைத்தது.

- Advertisement -

இந்த நிலையில் அடுத்ததாக நடைபெற உள்ள விஜய் ஹசாரே டிராபியில் ரிங்கு சிங் உத்தரபிரதேச அணியை வழிநடத்த இருக்கிறார். இந்த நிலையில் கொல்கத்தா அணி தனது கேப்டனை இன்னும் அறிவிக்காத நிலையில் கொல்கத்தா அணியில் கேப்டன் பதவி குறித்து தான் அதிகமாக சிந்திக்கவில்லை எனவும், தற்போது நான் விளையாட உள்ள விஜய் ஹசாரே ட்ராபியில் தனது அணியை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து மட்டுமே எனது சிந்தனை உள்ளதாக சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

நான் அது குறித்து சிந்திக்கவில்லை

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “புதிய ஐபிஎல் சீசனில் நான் கொல்கத்தா அணியில் கேப்டன் பதவி குறித்து அதிகம் சிந்திக்கவில்லை. 2015 மற்றும் 16ஆம் ஆண்டில் கோப்பையை வென்ற தமது உத்தரப்பிரதேச அணி மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே தனது நோக்கம். நான் யூபி டி20 லீக்கில் பந்து வீச முயற்சித்தேன். இன்றைய கிரிக்கெட் தொடர் ஒரு முழு பேக்கேஜை தான் விரும்புகிறது. பேட்டிங் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் செய்யக்கூடிய வீரராக இருப்பது முக்கியம்.

இதையும் படிங்க:இந்திய அணி பாகிஸ்தான் வரனும்னா.. இந்த விஷயம் கண்டிப்பா நடக்கணும் – ஹர்பஜன் சிங் பேட்டி

எனவே நான் தற்போது பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். மேலும் கேப்டனாக எனக்கு இப்போது ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. இதற்கு நான் தயாராக இருப்பது அவசியம். நான் கடவுளை எப்போதும் நம்புகிறேன், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் ஐந்து சிக்சர்கள் அடித்த பிறகு இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அதுவே என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது. இப்போதும் கடவுள் எனக்காக ஏதாவது செய்வார் என்று உணர்கிறேன். ஆனால் அதற்காக நான் கடினமாக உழைக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts