கம்பீர தப்பா நினைக்காதீங்க.. அவர் எங்ககிட்ட இதையெல்லாம் செய்ற ஆள்தான் – ரிங்கு சிங் பேட்டி

0
10
Rinku

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் எப்பொழுதும் கோபப்படக்கூடியவர் கிடையாது எனவும், அவர் மிகவும் தங்களிடம் கலகலப்பாக இருக்கக்கூடியவர் எனவும் ரிங்கு சிங் தெரிவித்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் கோபப்படக்கூடியவராகவும், களத்தில் எதிரணி வீரர்களிடம் மோதக்கூடியவராகவும் கவுதம் கம்பீர் அறியப்படுகிறார். ஆனால் உண்மையில் அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்பது குறித்து ரிங்கு சிங் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு கம்பீர் வழிகாட்டியாக இருந்த பொழுது அந்த அணி ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணியில் முக்கிய வீரராக ரிங்கு சிங் இருந்தார். மேலும் இந்திய அணிக்கு கம்பீர் பயிற்சியாளராக வந்ததும் ரிங்கு சிங்குக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தார்.

தற்போது ரிங் சிங் ஃபார்மில் இல்லாவிட்டாலும் கூட ஆசிய கோப்பை இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதற்கு அடுத்த சில நாட்களிலே உத்தரபிரதேச டி20 லீக்கில் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இந்த நிலையில் அவர் தன்னுடைய பயிற்சியாளர் கம்பீர் பற்றி சில முக்கிய விஷயங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கம்பீர் கலகலப்பானவர்

இதுகுறித்து ரிங்கு சிங் பேசும்பொழுது “கம்பீர் சார் வீரர்களை மிகவும் ஆதரிக்க கூடியவர். வீரர்களை சுதந்திரமாக இருக்க வைத்து களத்தில் மிகவும் சிறப்பாக செயல்படும்படி விடக்கூடியவர். நாம் விரும்பியதை செய்வதை அவர் ஆதரிப்பார். உங்களுக்கே தெரியும் அவர் மிகவும் ஆக்ரோஷமானவர் வெற்றி பெற விரும்புகிறார். இது ஒரு நல்ல குணம். அவர் அணியின் வெற்றியை விரும்புகிறார். அவர் அணிக்காக எப்பொழுதும் கவனம் செலுத்துவதுடன் பிரார்த்தனை செய்கிறார். நான் பார்ப்பதில் அவர் சிறந்த பயிற்சியாளர் மற்றும் ஆதரவாளர்”

இதையும் படிங்க : என்ன கம்பீர் இது?.. கேப்டனாக வேண்டிய பையன் அவரு.. இது மோசமான முடிவு – பிராட் ஹேடின் பேச்சு

“அவர் டிரெஸ்ஸிங் ரூமில் நிறைய சிரிப்பார். மேலும் பாடல்கள் கேட்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். ரமன் தீப் சிங் பாடல்களை பிளே செய்வார். அவர் அணிக்குள் எப்பொழுதும் ஒரு நல்ல சூழ்நிலை இருப்பதை உறுதி செய்வார். எப்போதும் அவர் கோபத்துடன் மட்டுமே இருக்கக் கூடியவர் கிடையாது. நிறைய வேடிக்கை மற்றும் நகைச்சுவை இருக்கும். நான் அவருடன் அப்படி நடந்து கொண்டதில்லை. ஆனால் சீனியர்கள் செய்வார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -