ஆசியக் கோப்பை இந்திய டி20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது மிகவும் மோசமான முடிவு என பஞ்சாப் துணை பயிற்சியாளர் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹேடின் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த ஆண்டு அடுத்த மாதம் யுஏஇல் தொடங்க இருக்கின்ற ஆசிரியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இது இந்திய கிரிக்கெட் வட்டத்தில் பெரிய விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது. தமிழக முன்னாள் வீரர்கள் வரையில் கம்பீர் மற்றும் அகர்கர் மீது விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.
மாறிய டெக்னிக்
முன்பு ஸ்ரேயாஸ் ஐயர் பேட் உடலுக்கு வெளியில் இருந்து வரும். தற்போது அவருடைய பேட் உடலை ஒட்டி வருகிறது. இதை வைத்து ஷாட்பால் பலவீனத்தை சரி செய்திருக்கிறார். இதன் காரணமாக முன்பை விட அவரது நிலைத்தன்மை மிகவும் அதிகமாக மாறி இருக்கிறது.
இத்தோடு அவர் அதிரடியும் கூடிவிட்டது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை இறுதி போட்டிக்கு கேப்டனாக அழைத்துச் சென்றார். மேலும் பேட்ஸ்மேனாக 600 க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இதை 175 என்கின்ற பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார். இந்த வகையில் அவர் ஒட்டுமொத்தமாக மாறி இருக்கிறார்.
நம்ப முடியவில்லை
இந்த நிலையில் ஆசிய கோப்பை இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படாத குறித்து பிராட் ஹேடின் பேசும்போது ” அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமைத்துவ குணம். அடுத்து நெருக்கடியான நேரத்தில் அவர் அழுத்தத்தை எடுக்காமல் எப்படி விளையாடுகிறார் என்பது. அவர் அணியில் இருந்தால் அனைவருமே சிறப்பாக விளையாடுவார்கள்”
இதையும் படிங்க : சிங்கம் மாதிரிதான் இருப்பேன்.. ஐபிஎல்ல எப்ப ஓய்வு விராட் பையா என்கிட்ட சொல்லிட்டாரு – ஆர்சிபி வீரர் பேச்சு
“எனக்கு அங்கு என்ன நடந்தது என்று தெரியாது. நான் பார்த்தபோது ஆசிய கோப்பை இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் பெயர் இல்லை. நான் அவருக்கு காயம் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் பின்புதான் காயம் இல்லை என்று தெரிந்தது. அவரை சேர்க்கவில்லை என்று புரிந்தது. இது ஒரு விசித்திரமான முடிவு. அவர் ஆட்டத்திற்கு நிறைய விஷயங்களை கொண்டு வருவார். அவரை கேப்டனாக்குவார்கள் என்று நான் நினைத்தேன்” என்று கூறி இருக்கிறார்.






