கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரர் நிதீஷ் ராணாவுடன் விளையாடிய போது ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பற்றி ரிங்கு சிங் கூறியுள்ளார். ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த ரிங்கு சிங்கின் வெளிநாட்டிற்கு பயணம் செய்ய வேண்டும் என்ற தனது கனவு, ராணாவின் உதவியால் எதிர்பாராத வகையில் நிறைவேறியதை வெளிப்படுத்தினார்.
2019இல் நிதீஷ் ராணா திருமணம் செய்துகொண்ட பிறகு அவருடன் ஹனிமூனுக்கு சென்றதாக ரிங்கு சிங் கூறினார். ரிங்குவுக்கு, இது தனது முதல் வெளிநாட்டு பயணமாக இருந்ததாக அவர் கூறினார்.“இந்தியாவுக்கு வெளியே பயணம் செய்வது எனது எப்போதும் உள்ள கனவாக இருந்தது. 2019இல், நிதீஷ் ராணா திருமணம் செய்துகொண்டபோது, நாங்கள் ரொம்ப நெருக்கமானவர்கள் என்பதால் அவர் என்னைத் தனது ஹனிமூனுக்கு அழைத்துச் சென்றார்.”
“அவர் என்னை அங்குள்ள மக்களுடன் பேச வைத்து, எனது நம்பிக்கையை வளர்க்க விரும்பினார். ஆங்கிலத்தில் எப்படி பேசுவேன் என்று நான் தொடர்ந்து சிந்தித்தேன். பொருட்களைக் கேட்பது அல்லது எனக்கு தேவையானவற்றைச் சொல்வது எப்படி. நான் உணவு மற்றும் அனைத்திற்கும் கை சைகைகளைப் பயன்படுத்தி ஆர்டர் செய்வது வழக்கம்.”
“இந்தியாவுக்கு திரும்பும் வழியில், ராணா அண்ணா பசிக்கிறது. என்கிறார், மெக்கடோனால்ட்ஸ் உணவகத்தில் பர்கர் ஆர்டர் செய்ய சொன்னார். நான் சிக்கன் பர்கரை வாங்கினேன், ஆனால் அவர், ‘ஏன் சீஸ் சேர்க்கவில்லை?’ என்றார். நான், எப்படி சொல்வது என்று கூறினேன்? ‘சீஸ்’ என்று சொல்வது எனக்கு தெரியவில்லை, ஆங்கிலத்தில் வாக்கியத்தை உருவாக்குவதில் போராடினேன்.” என்று கூறினார்.
ரிங்கு சிங்கிற்கும், சமாஜ்வாதி கட்சியின் பிரியா சரோஜுடன் திருமணம் செய்ய தயாராக உள்ளார். அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞரும் ஆவார். ஜூன் 8, 2025 அன்று, லக்னோவில் உள்ள சென்ட்ரம் 5-நட்சத்திர ஹோட்டலில், அரசியல் மற்றும் கிரிக்கெட் உலகத்தின் பல முக்கியமான நபர்கள் முன்னிலையில், தம்பதியினர் நிச்சயம் செய்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆர்சிபி கோச்தான் இப்ப பாகிஸ்தான் கோச்.. இது ஒரு சாதாரண டீம்.. 2 இந்திய பிளேயரே போதும் – ஸ்ரீகாந்த் கருத்து
அவர்களது திருமணம் முதலில் நவம்பர் 18 அன்று, வரணாசியில் உள்ள 5-நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், ரிங்குவின் கிரிக்கெட் அட்டவணை காரணமாக, திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. தம்பதியினர் இப்போது 2026 பிப்ரவரியில் திருமணம் செய்ய உள்ளனர். தற்போது ரிங்கு சிங் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.