“ரிங்கு சிங்குக்கு எல்லாம் தெரியும்.. பசங்க அவரை பார்த்து கத்துக்கனும்” – ருதுராஜ் மனம் திறந்த பாராட்டு!

0
1002
Ruturaj

நேற்று அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று, தற்பொழுது தொடரை கைப்பற்றி இருக்கிறது!

இந்த போட்டியில் டாஸ் வென்று அயர்லாந்து அணி முதலில் பந்து வீசியது. இந்திய அணிக்கு ருத்ராஜ் 58, சாம்சன் 40 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்கள். ரன் வேகத்தை அதிகரிக்க வேண்டிய நேரத்தில் நிலைத்து நின்று விளையாடிய இவர்கள் இருவரும் ஆட்டம் இழந்தது இந்திய அணிக்கு பின்னடைவாக போட்டியில் அமைந்தது.

- Advertisement -

இந்த நேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முதலாக பேட்டிங் செய்ய வந்த ரிங்கு சிங் சிவம் துபே உடன் சேர்ந்து புத்திசாலித்தனமான அதே சமயத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்தை பார்ப்பதற்கு, பல போட்டிகளில் விளையாடிய ஒரு பினிஷர் போல் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இடது கையில் தோனியை பார்த்தது போல் இருந்தது.

முதல் பதினைந்து பந்துகளுக்கு 15 ரன்கள் சேர்த்த அவர். கடைசி இரண்டு ஓவர்களில் 6 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 23 ரன்கள் சேர்த்தார். 21 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரது அதிரடியின் காரணமாக இந்திய அணி 185 ரன்கள் சேர்த்தது. இந்தியா அணி வெற்றி பெற்ற ரன் வித்தியாசம் 33. எனவே இவருக்கு நேற்று ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்து தற்போதைய இந்திய t20 அணியின் துணை கேப்டன் ருத்ராஜ் கூறும்பொழுது ” இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு ரிங்கு சிங் அனைவருக்கும் பிடித்தவர் ஆகிவிட்டார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் பேட்டிங்கில் மிகவும் முதிர்ச்சியை காட்டினார். ரிங்குவின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் அவர் முதல் பந்தில் இருந்து அடிக்க ஆரம்பிப்பது கிடையாது.

- Advertisement -

நிலைமை என்னவாக இருந்தாலும் ரிங்கு தனக்கு எப்பொழுதும் ஒரு நேரம் ஒதுக்குகிறார். நிலைமைகளை மிகச் சரியாக மதிப்பிடுகிறார். இதற்கு அடுத்துதான் அவர் தாக்குதல் முறையில் சென்று ரன் சேர்க்கிறார்.

எனவே வரவிருக்கும் வீரர்களும், ஃபினிஷிங்கில் ஆடக்கூடிய வீரர்களும் அவரைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் நீங்கள் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். பின்னர் நீங்கள் அதிரடியில் ஈடுபடலாம். இதை அவர் கற்றுக் கொண்டார் என்று நான் நினைக்கிறேன்.

எப்பொழுது ட்ரிக்கரை இழுக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும். இந்தத் திறமை அவருக்கு இருக்கிறது. சரியான நேரத்தில் அவர் ட்ரிக்கரை இழுத்தார். இது அவருக்கு முக்கியமான இன்னிங்ஸ் ஆக இருந்தது. இது அவருக்கு முதல் ஆட்டமாகவும் இருந்தது. மேலும் இது அவருக்கு உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!