கேகேஆர் அணிக்கு யுவராஜ் சிங் வாழ்த்து.. கோபமான தோனி ரசிகர்கள் விமர்சனம்.. காரணம் என்ன?

0
309
Yuvraj

நடப்பாண்டு ஐபிஎல் தொடரை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மற்றும் கம்பீர் வழிகாட்டுதலில் இயங்கும் கொல்கத்தா அணி கைப்பற்றி இருக்கிறது. தற்பொழுது கொல்கத்தா அணிக்கு யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்து பதிவு தோனி ரசிகர்களால் பெருத்த விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 113 ரன்கள் மட்டுமே எடுத்து சுருள, கொல்கத்தா அணி வெறும் 10.3 ஓவரில் இரண்டு விக்கெட்டை மட்டுமே இழந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இந்த ஆண்டு லக்னோ அணியின் மென்டர் பொறுப்பில் இருந்து கம்பீர் விலகி கொல்கத்தா அணியின் மென்டராக பொறுப்பேற்றார். இதற்கு அடுத்து சுனில் நரைன் டாப் ஆர்டர் வரிசையில் பேட்டிங்கில் உயர்த்தப்பட்டார். அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 488 ரன்கள் குவித்தார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து மிட்சல் ஸ்டார்க்கை கம்பீர் ஏலத்தில் கொல்கத்தா அணிக்கு கொண்டு வந்தார்.

இந்த முடிவுகள் இரண்டுமே கம்பீரால் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு முடிவுகளும் கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற பெரிதும் உதவி இருக்கின்றது. எனவே பலரும் கேப்டனை விட்டு விட்டு மென்டரான கம்பீரை பாராட்டி வருகிறார்கள். தற்பொழுது இதுதான் பிரச்சினையாகி இருக்கிறது.

யுவராஜ் சிங் வாழ்த்துக் கூறும்போது “2024 ஆம் ஆண்டு ஐபிஎல் பட்டத்தை வென்றதற்காக கொல்கத்தா அணிக்கு எனது வாழ்த்துக்கள். சீசன் முழுவதும் அவர்கள் தனித்துவமான அணியாக இருந்தார்கள். இந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக ரன்கள் குவித்த ஹைதராபாத் அணிக்கும் வாழ்த்துக்கள். இன்று சிறந்த அணி வெற்றி பெற்றது. அஞ்சாத வழிகாட்டுதலுக்கு கம்பீருக்கும், இந்த ஆண்டு சினிமா மற்றும் கிரிக்கெட்டில் வெற்றிகளை குவிக்கும் ஷாருக்கானுக்கும் வாழ்த்துக்கள்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : கம்பீர் இல்லை.. கேகேஆர் சாதிக்க காரணமான யாருமே பேசாத இந்திய முன்னாள் வீரர்.. வருண் வெங்கடேஷ் உருக்கம்

உலகக் கோப்பை வெற்றி களுக்கு கேப்டனாக தோனியை குறிப்பிடுவது தொடர்பாக யுவராஜ் சிங் கம்பீர் போன்றவர்கள் மாற்றுக்கருத்தை வைத்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் யுவராஜ் சிங் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கேப்டனாக கூட இல்லாத கம்பீர எப்படி பாராட்டலாம் என சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். அதே சமயத்தில் யுவராஜ் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.