கோலி அந்தவொரு விஷயத்தை செய்யவே கூடாதுனு சொன்னாரு .. ஆனா அவர் செஞ்சத எதிர்பார்க்கல – ரிங்கு சிங் பேட்டி

0
21
Rinku

ரிங்கு சிங் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பல விஷயங்கள் குறித்து மிக வெளிப்படையாக பேசி இருந்தார். இதில் விராட் கோலியை தான் முதலில் அணுக பயமாக இருந்தது என்றும் கூறியிருக்கிறார். மேலும் இந்த பேட்டியில் நிறைய விஷயங்களை கூறியிருக்கிறார்.

மேலும் விராட் கோலி ஐபிஎல் தொடரின் போது ரிங்கு சிங்குக்கு பேட் கொடுத்தது பரவலாக சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும் அப்பொழுது ரிங்கு சிங்குக்கு நீண்ட நேரம் விராட் கோலி நின்றபடியே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று தற்போது ரிங்கு சிங் கூறியிருக்கிறார்.

- Advertisement -

அதை எதிர்பார்க்கவே இல்லை

விராட் கோலி உடனான சந்திப்பு பற்றி பேசி இருக்கும் ரிங்கு சிங் கூறும்பொழுது “விராட் கோலி பாய் மிகவும் சீனியர் என்பதால் அவரை அணுகுவதற்கு கொஞ்சம் பயம் இருந்தது. அவர் எனக்கு ஏற்கனவே கொடுத்த உடைந்த பேட்டை காட்டுவதற்காக நான் அவரிடம் சென்று இருந்தேன். ஆனால் அவர் எனக்கு மீண்டும் புதிய பேட் ஒன்றை கொடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் அவரிடம் நீங்கள் கொடுத்த பேட் வலையில் பயிற்சி செய்யும் பொழுது உடைந்து விட்டது என்று கூறினேன்”

“நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் அவர் எனக்கு முதல் முறையாக ஒரு பேட் கொடுத்தார். எனக்கு விளையாடுவதற்கு ஒரு பேட் தேவை என்று நான் அவரிடம் கேட்டேன். நான் கேட்டதால் எனக்கு அவர் முதல்முறையாக ஒரு பேட் கொடுத்தார். அந்த பேட் மூலம் நான் ஐபிஎல் தொடரில் அடித்து நொறுக்க நினைத்தேன். ஆனால் அது வலையில் பயிற்சி செய்யும் பொழுதே உடைந்து விட்டது”

- Advertisement -

எரிச்சல் அடையாதே

மேலும் தொடர்ந்து பேசிய ரிங்கு சிங் “எனக்கு விராட் கோலி பாய் கிரிக்கெட் சம்பந்தமாக அறிவுரை கூறும் பொழுது ரன்கள் வராத பொழுது நம் மனநிலையை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து மிக முக்கியமான விஷயத்தை கூறினார். குறிப்பாக ரன்கள் வராத பொழுது எரிச்சல் அடையக் கூடாது என்று கூறினார். இந்த விஷயங்கள் எனக்கு மிகவும் முக்கியமானது. ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் இருந்து இதை நாம் கற்றுக் கொள்கிறோம்”

இதையும் படிங்க : ரோகித் இல்லை தோனிக்கு மரியாதை.. ஷாகிப் செலக்ட் செய்த.. ஆல் டைம் உலக ODI பிளேயிங் XI

“உடல் தகுதியில் அவர் உச்சத்தில் இருக்கிறார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அவரிடமிருந்து இதில் உத்வேகம் பெற்று, நானும் எப்படி உடல் தகுதியுடன் இருப்பது என்று கற்றுக்கொள்கிறேன். அவரைப் பார்த்து நானும் தற்பொழுது நல்ல டயட்டை பின்பற்றிக் கொண்டு வருகிறேன். மேலும் நான் அவருடன் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஒருமுறை விளையாடியிருக்கிறேன். ஆனால் அவருடன் நிறைய தொடர்களில் விளையாட வேண்டும்” என்று விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -