உலகின் சிறந்த டெஸ்ட் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தன்னுடைய ஆல் டைம் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
ஷாகிப் அல் ஹசன் தேர்ந்தெடுத்து இருக்கும் இந்த பிளேயிங் லெவனில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு இடம் கொடுக்கப்படவில்லை. அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்த அதிரடி துவக்க ஆட்டக்காரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனிக்கு மரியாதை
மேலும் அவர் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருக்கிறார். மேலும் அவரே விக்கட் கீப்பராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தோடு இன்னும் இரண்டு இந்திய வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.
மேலும் எல்லாக் காலத்திலும் சிறந்த வேத பந்துவீச்சாளராக இடம்பெறக்கூடிய ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஷாகிப் அல்ஹசன் தன்னுடைய அணியில் இடம் கொடுக்கவில்லை. மேலும் தற்சமயம் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் பலரை தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னை இணைத்த ஷாகிப் அல் ஹசன்
மேலும் இந்த பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்த ஷாகிப் அல் ஹசன் தன்னுடைய பெயரையும் இணைத்திருக்கிறார். மேலும் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் மற்றும் ஆஸ்திரேலியாவின்கிளன் மெக்ராத் என இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களை உடன், முத்தையா முரளிதரன் மற்றும் சேன் வார்னே என இரண்டு லெஜெண்ட் சுழல் பந்துவீச்சாளர்களையும் வைத்திருக்கிறார்.
இத்துடன் இந்த அணியில் பேட்ஸ்மேன்களாக சச்சின் டெண்டுல்கர், சையத் அன்வர், கிறிஸ் கெயில்,விராட் கோலி, ஜாக் காலிஸ் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் இருக்கிறார்கள். ஷாகிப் அல்ல ஹசன் தேர்ந்தெடுத்த ஆல் டைம் உலக ஒருநாள் கிரிக்கெட் பிளேயிங் லெவனை கீழே பார்க்கலாம்.
இதையும் படிங்க : உறுதியா சொல்றேன்.. விராட் ரோகித் ரிட்டையர்டு அப்பதான் நடக்கும்.. காரணம் இதுதான் – சஞ்சய் பாங்கர் விளக்கம்
சச்சின் டெண்டுல்கர், சயீத் அன்வர், கிறிஸ் கெய்ல், விராட் கோலி, ஜாக் காலிஸ், தோனி (கேப்டன் & வி.கீ ), ஷாகிப் அல் ஹசன், முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, வாசிம் அக்ரம் மற்றும் கிளன் மெக்ராத்.