நான் உள்ள போனதும் நிதிஷ் குமார் என்கிட்ட இதை சொன்னார்.. வெளிய 2 பேர் சப்போர்ட் பண்றாங்க – ரிங்கு சிங் பேட்டி

0
1437
Rinku

நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான தன்னுடைய சிறப்பான பேட்டிங் அணுகுமுறைக்கு யார் காரணமாக இருந்தார்கள்? என்பது குறித்து ரிங்கு சிங் பேசியிருக்கிறார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ரிங்கு சிங் மற்றும் நிதீஷ் குமார் இருவரும் இணைந்து இந்திய அணி முதல் மூன்று விக்கெட்டுகளை வேகமாக இழந்த போதும் அதிரடியாக விளையாடினார்கள். 59 பந்தில் 108 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணி 200 தாண்டவும் வெற்றி பெறவும் முக்கிய காரணமாக இருந்தார்கள்.

- Advertisement -

ரிங்கு சிங் கடந்த காலம் மற்றும் எதிர்காலம்

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் ரிங்கு சிங் கட்டாயம் விளையாடுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணி கலவையில் அவருக்கு இடம் தருவதற்கு வாய்ப்பில்லாமல் போனது. இதனால் ரிசர்வ் வீரராக டி20 உலகக்கோப்பைக்கு சென்று விளையாட முடியாமல் திரும்பினார்.

இந்த நிலையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றிருக்கும் காரணத்தினால், அடுத்து இந்தியா மற்றும் இலங்கையில் 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையில் ரிங்கு சிங் கட்டாயம் விளையாடுவார் என்று தெரிகிறது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சரியாகப் போகாமல் இருந்த நிலையில், நேற்று வழக்கம்போல் அதிரடியாக 29 பந்தில் 53 ரன்கள் குவித்து தன் மறு வருகையை அறிவித்தார்.

- Advertisement -

நிதீஷ் குமார் இதுதான் சொன்னார்

நேற்றைய போட்டி குறித்து ரிங்கு சிங் பேசும்பொழுது “என்னுடைய கேப்டன் மற்றும் பயிற்சியாளர் போட்டியின் சூழ்நிலை பற்றி கவலைப்படாமல் என்னுடைய ஷாட்களை இயல்பாக விளையாடும் படி என்னிடம் கூறினார்கள். நான் என்னுடைய ஷாட்டை ஆதரிக்கவும், நான் ஒவ்வொரு பந்தையும் நம்பிக்கை உடன் விளையாடவும் அவர்கள் எனக்கு முழுமையான சுதந்தரத்தை கொடுத்திருக்கிறார்கள்”

இதையும் படிங்க : நிதிஷ் குமார் நேற்று இந்த தப்ப செய்யவே இல்லை.. கம்பீர் அந்த பிளான் போட்டு இருக்காரு – ஆகாஷ் சோப்ரா கருத்து

“நேற்று முதலில் நாங்கள் விளையாடும் பொழுது ஆடுகளத்தில் பந்து நின்று வந்தது. பிறகு நாங்கள் முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டோம். நான் உள்ளே சென்ற பொழுதும் பந்து மிகவும் நின்று கொஞ்சம் மெதுவாகவே இருந்தது. அப்பொழுது நிதீஷ் என்னிடம் பந்து நின்று வருகிறது பார்த்து விளையாடுங்கள் என்று கூறினார். மேலும் வேகத்தை தக்க வைக்க வேண்டும் மற்றும் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.பிறகு அதை அற்புதமாக நிதீஷ் செய்து கொடுத்தார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -