நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய வீரர் நிதிஷ்குமார் பேட்டிங் மற்றும் பங்குவீச்சின் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதுபெற்றார். அவர் பேட்டிங்கில் எப்படியான புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தினார்? என ஆகாஷ் சோப்ரா பாராட்டி இருக்கிறார்.
தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரை பேக்கப் வீரர்களை கண்டறிவதற்கான தொடராக பயன்படுத்தி வருகிறது. இதன் காரணமாக ரவி பிஸ்னாய் போன்று அணிக்காக விளையாடி வரக்கூடியவர்களை வெளியில் வைத்து, புதிதாக அணியில் தேர்ந்தெடுத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறது.
ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரர்
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “இந்த போட்டி நிதிஷ் குமாருக்காக அர்ப்பணிக்கப்பட்ட போட்டி என்று நான் நினைக்கிறேன். அவர் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வைக்கப்பட்டார். அந்த இடத்தில் ரிங்கு சிங் அல்லது ரியான் பராக் விளையாட வைக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் பயிற்சியாளர் கம்பீர் நிதிஷ் குமாரை அங்கு விளையாட வைத்தார். ஏனென்றால் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக அவரைப் பார்ப்பதால் கண்காணிக்க விரும்புகிறார்கள்”
“அவர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாகவே இவரை பார்க்கிறார்கள். குறைந்தபட்சம் ஹர்திக் பாண்டியாவுக்கு தோளோடு தோளாக இவர் நிற்க முடியும். எனவே அவர் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும். இதற்கு அவருக்கு வாய்ப்பு கொடுத்தாக வேண்டும் எனவே வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது”
நிதிஷ் குமார் புத்திசாலித்தனம்
மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா “முதல் போட்டியில் புதிய பந்தில் ஹர்திக் பாண்டியா வீசினார். இரண்டாவது போட்டியில் நிதிஷ்குமார் வீசவைக்கப்பட்டார். ஆனால் அவர் விக்கெட் வீழ்த்தவில்லை. இதனால் எந்த பிரச்சினையும் இல்லை. அதே சமயத்தில் அவர் கடைசி கட்ட ஓவர்களில் விக்கெட் வீழ்த்த கூடியவராக தெரிகிறார்”
இதையும் படிங்க : இந்தியா கிட்ட இருந்து இத நாங்க கத்துக்கணும்.. இன்னொரு மைக்கேல் பெவன்யா அந்த பையன் – பாக் பசித் அலி பாராட்டு
“நிதிஷ் குமார் ரெட்டி அங்கும் இங்கும் எங்கும் நகராமல் நின்ற இடத்தில் மிகவும் வலிமையான அடித்தளத்தை பெற்று நிற்கிறார். இதன் காரணமாக அவரால் வேகம் மற்றும் சுழல் பந்துவீச்சில் நின்ற இடத்திலேயே சிக்ஸர்கள் அடிக்க முடியும்.அத்துடன் டெல்லி ஆடுகளத்தில் பவுன்சர் குறைவாக இருந்தது. இதனால் பந்தை மடக்கி அடித்தால் ஆட்டம் இழந்து இருப்பார். ஆனால் அவர் பந்தை புத்திசாலித்தனமாக நேராக அடித்தார். தவறு ஏதும் செய்யவில்லை” என்று கூறி இருக்கிறார்.






