6, 6, 6.. நான்தான் பினிஷர்.. ஷிவம் துபேவுக்கு இடம் கிடையாது.. ரிங்கு சிங் சிங் செய்த காரியம்

0
96
Rinku

தற்போது நடைபெற்று வரும் டெல்லி பிரிமியர் லீக் டி20 தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் ரிங்கு சிங் ஆசியக் கோப்பை இந்திய பிளேயிங் லெவனில் தனது இடத்தை உறுதி செய்திருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

அடுத்து இந்திய அணி விளையாட இருக்கும் ஆசிய கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் இடம் பெற மாட்டார் என்று பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து சில செய்திகள் வந்தது. ஆனால் அணி அறிவிப்பின்போது அவருடைய பெயர் இடம் பெற்றது.

- Advertisement -

கலக்கல் பேட்டிங்

இந்த ஆண்டு டெல்லி பிரிமியர் லீக் தொடரில் ரிங்கு சிங் ஆசிய கோப்பை இந்திய அணியில் தனது பெயர் வந்ததும் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் சதம் அடித்து 108 ரன்கள் குவித்தார். இதற்கு அடுத்த போட்டியில் 27 பந்துகளில் 57 ரன்கள் அதிரடியாக எடுத்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் ரிங்கு சிங் 48 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 78 ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றி பெற வைத்தார். இதில் கடைசியில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் அடித்து போட்டியை அற்புதமாக பினிஷிங் செய்தார்.

ஷிவம் துபேவுக்கு இடமில்லை

தற்போது ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சிவம் துபே அல்லது ரிங்கு சிங் இருவரில் ஒருவர்தான் இடம்பெற முடியும் என்கின்ற நிலை இருக்கிறது. இந்த நிலையில் தற்போது சிவம் துபே எந்த போட்டியிலும் விளையாடாமல் இருந்து வருகிறார். இதனால் அவருடைய பார்ம் எந்த அளவுக்கு இருக்கிறது என தெரியவில்லை.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு மென்டரா தோனி வரணும்.. அப்ப கம்பீர் கிட்ட இத நான் பாக்கணும் – மனோஜ் திவாரி பேச்சு

அதேசமயத்தில் ரிங்கு சிங் டெல்லி பிரிமியர் லீக் தொடரில் விளையாடுகின்ற காரணத்தினால் அவர் சிறந்த பார்மில் இருப்பது தெரிகிறது. எனவே ரிங்கு சிங் ஆசியக் கோப்பை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என்பது உறுதியாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -