இந்திய அணிக்கு மென்டரா தோனி வரணும்.. அப்ப கம்பீர் கிட்ட இத நான் பாக்கணும் – மனோஜ் திவாரி பேச்சு

0
73
Dhoni

இந்திய அணிக்கு மென்டராக வருவதை தான் விரும்புவதாகவும், அதே சமயத்தில் அவருக்கு அனுப்பப்படும் செய்திகளை அவர் பார்த்து பதில் அளிக்கவே மாட்டார் என்றும் மனோஜ் திவாரி கூறியிருக்கிறார்.

நேற்று சமூக வலைதளங்களில் 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியின் மென்டராக தோனி நியமிக்கப்பட பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2021 ஆம் ஆண்டு

விராட் கோலி கேப்டனாக கடைசியாக 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு செயல்பட்டார். அந்த தொடரில் இந்திய அணி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமாக இந்த உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியின் மென்டராக தோனியை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்திருந்தது.

மேலும் தோனி தன்னுடைய விருப்பமான வீரரான ஹர்திக் பாண்டியா உடல் தகுதி இல்லாத போதும் அணியில் சேர்த்தது பின் நாட்களில் விமர்சனத்தை உண்டாக்கியது. இந்த நிலையில் மீண்டும் தோனியை டி20 உலகக் கோப்பை தொடருக்கு மென்டராக கொண்டு வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

தோனி வரவேண்டும்

இதுகுறித்து மனோஜ் திவாரி பேசும் பொழுது “தோனி இந்திய அணியின் மென்டராக வருவாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஏனென்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்வது மிகவும் கடினமான விஷயம். அவரிடமிருந்து நாம் அனுப்பும் மெசேஜ்களுக்கு பதில் வருவது மிகவும் அரிதானது. பலவீரர்கள் இதைச் சொல்லி இருக்கிறார்கள். அவர் முதலில் மெசேஜை படிப்பாரா இல்லையா என்றே தெரியாது”

இதையும் படிங்க : எங்க சிஎஸ்கே ஆயுஸ் மத்ரேவைவை விட சூரியவன்சி பெரிய டேலண்ட்.. காரணம் இதுதான் – சுரேஷ் ரெய்னா கருத்து

“உண்மையிலேயே தோனி இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டால் தற்போது தலைமை பயிற்சியாளராக இருக்கும் கம்பீர் இருவரும் எப்படி இணைந்து செயல்படுவார்கள்? என்பதை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். இந்த ஜோடியை பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -