நேற்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஜோஸ் இங்லீஷ் 50 பந்துகளில் அதிரடியாக 110 ரன்கள் எடுக்க 208 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு இசான் கிஷான் மற்றும் சூரிய குமார் யாதவ் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடிய அதிரடியாக அரை சதங்கள் எடுத்தார்கள்.
ஆனாலும் இறுதி நேரத்தில் திடீரென ஏற்பட்ட நெருக்கடியால், இந்திய அணி தோல்வி அடையும் இடத்துக்கும் செல்ல வேண்டி இருக்கலாம் என்கின்ற நிலை மாறியது.
இப்படியான நிலையில் களத்தில் இறுதிவரை என்ற ரிங்கு சிங் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். ஒரு ஃபினிஷராக அவருடைய ஆட்டமும் முதிர்ச்சியும் பெரிய அளவில் இருந்து வருகிறது.
இதற்கு முன்பு அயர்லாந்து மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு முறை அற்புதமாக ஆட்டத்தை ஃபினிஷ் செய்து கொடுத்திருக்கிறார். இந்தக் குறுகிய காலத்தில் அவருக்கு இது சிறப்பான மூன்றாவது ஃபினிஷிங் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்திய நடிகர் முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் கூறும் பொழுது “இதை செய்வதற்கு நிறைய குணாதிசயங்கள் தேவை. ஐபிஎல் தொடரிலும் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் இதை ரிங்கு சிங் நிறைய முறை செய்திருக்கிறார். அவர் பரபரப்பை மிகவும் கட்டுப்படுத்தி அமைதியான முறையில் இருந்து ஆனால் அதிரடியாக செய்கிறார்.
அவர் இந்தியாவுக்காக இப்படி செய்வது மூன்றாவது முறையாகும். இந்தியாவுக்காக அவர் ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டி இருந்தது. ரிங்கு சிங் ஐந்து ஆறு ஆண்டுகள் இந்திய அணிக்காக சர்வதேச அளவில் விளையாடியவர் கிடையாது. ஆனால் அப்படி விளையாடுபவர்கள் கொண்டிருக்கும் முதிர்ச்சி அவரிடம் இருக்கிறது.
ஒரு இன்னிங்ஸை முடிக்கும் கலையில் அவர் தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பதை உங்களுக்கு இது காட்டுகிறது. இந்திய அணிக்கு இதற்கு முன்பு தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இதை செய்தார்கள்.
ஆனாலும் ரிங்கு சிங்கை வைத்து பார்க்கும் பொழுது இந்த பினிஷிங் ரோலை அவரைவிட சிறப்பாக செய்பவர்கள் யாரும் கிடையாது. அவர் இறுதி நேரத்தில் பெறும் ரன்கள் மட்டுமல்ல, அந்த ரன்களை அவர் எப்படி எடுக்கிறார் என்பதுதான் முக்கியம். அவர் கிரிக்கெட் விளையாடும் விதத்தில் ஒரு பெரிய அமைதி இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!






