ஒரு வீரரா கோச்சா சொல்றேன்.. சாம்சன் பேட்டிங்ல மாற்றம் வந்ததுக்கு காரணம் இதுதான் – ரிக்கி பாண்டிங் கருத்து

0
10
Ricky

இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் பேட்டிங் சிறப்பாக மாறியதற்கு பின்னால் ஒரே காரணம்தான் இருக்க முடியும் என ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகளில் 321 ரன்கள் சஞ்சு சாம்சன் எடுத்தார். மேலும் ஒரு டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரராகவும் சாதனை படைத்தார்.

- Advertisement -

முடிந்த சாம்சன் பிரச்சனை

சஞ்சு சாம்சன் மிக இளம் வயதிலேயே ஐபிஎல் தொடரில் திறமையானவராக அடையாளம் காணப்பட்டார். மேலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஒருபுறம் அவருக்கு தொடர் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

அதே சமயத்தில் தொடர் வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட இடங்களில் அவர் சீராக ரன்கள் எடுக்கவில்லை. அவருடைய ஷாட் செலக்சன் தவறாக இருக்கின்ற காரணத்தினால் எப்போது வேண்டுமானாலும் ஆட்டம் இழக்க கூடியவராக இருந்தார். இதன் காரணமாக நிர்வாகத்திற்கு அவர் மேல் நம்பிக்கை இல்லாமல் போனது. ஆனால் தற்போது இந்த விஷயத்தை திருத்தி அமைத்துக் இறுதிவரை விளையாடி வெற்றியை தரக்கூடிய வீரராக மாறி உள்ளார்.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் கருத்து

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “ஒரு முன்னாள் கேப்டனாகவும் தற்போதைய பயிற்சியாளராகவும் சொல்கிறேன், ஒரு வீரர் முன்னேறி வர வேண்டுமென்றால், அணியின் பயிற்சி குழு மற்றும் கேப்டனின் ஆதரவு கிடைக்க வேண்டும். நண்பா உனக்கு நாங்கள் இருக்கிறோம், இந்த ரோலுக்கு நீதான் சரியானவன் என்பதை மட்டும்தான் நாம் ஒரு வீரருக்கு சொல்ல வேண்டும்”

இதையும் படிங்க : உண்மையை ஒத்துக்குறேன்.. எனக்கு ODI கிரிக்கெட் புரியல.. இந்த விஷயங்களை செய்ய வரல – சூரியகுமார் யாதவ் ஒப்புதல்

“கடந்த வாரங்களில் இந்திய அணிக்குள் என்னென்ன பேசப்பட்டு இருக்கும் என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் நிச்சயமாக கேப்டன் மற்றும் பயிற்சியாளர் குழு ஆதரவு இல்லாமல் சஞ்சு சாம்சன் இடம் இந்த மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. இதுதான் அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -