இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் டிராபி தொடரில் முதல் போட்டியாக வங்கதேச அணியை வருகிற 20-ம் தேதி எதிர்கொண்டு விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் இந்திய அணி குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர்
இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் முதல் போட்டியாக நாளை மறுதினம் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிரமான முறையில் தயாராகி வருகிறார்கள். இதில் இந்திய அணியைப் பொறுத்தவரை அனுபவம், இளமை என இரண்டும் கலந்து சரிசமமான வீதத்தில் அணி உள்ளது. மேலும் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆன பும்ரா காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா இடம் பெற்றார்.
இந்த நில்லையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பும்ரா இடத்தை நிரப்ப ஹர்ஷித் ரானா தான் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் பும்ரா இடத்தை நிரப்புவதற்கு அவர் மாதிரியே இறுதிக் கட்டத்தில் சிறப்பாக பந்து வீசக்கூடிய அர்ஸ்தீப் சிங் தேர்வு செய்யப்பட வேண்டும் என சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
பும்ராவுக்கு பதில் இவர் வேண்டும்
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் விரிவாக கூறும்போது “பும்ராவுக்கு பதிலாக நான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆன அர்ஸ்தீப் சிங்கை தேர்வு செய்வேன். ஏனென்றால் அவர் டி20 கிரிக்கெட்டில் எவ்வளவு சிறப்பாக விளையாடுகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மேலும் நீங்கள் திறன் தொகுப்பை பற்றி யோசித்துப் பார்த்தால் பும்ரா புதிய பந்து மற்றும் டெத் ஓவர்களில் செய்வது போன்ற ஒரு திறனை நிச்சயமாக இடது கை பவுலர் வழங்குவார். அதைத்தான் இந்திய அணி இந்த இடத்தில் தவற விடுகிறது.
இதையும் படிங்க:நான் பார்த்து ரசித்த 2 பவுலர்ஸ்.. இந்திய வீரரின் பெயரை குறிப்பிட்ட ஆஸி கேப்டன் கம்மின்ஸ்.. முழு விபரம்
ஹர்ஷித் ராணாவிடமிருந்து எதையும் குறைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவரிடம் நிறைய திறமைகள் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர் புதிய பந்தில் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் அவரது டெத் ஓவர் அணுகுமுறைகள் அர்ஸ்தீப் சிங் அளவுக்கு சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறி இருக்கிறார். எனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக பும்ராவின் இடத்தை நிரப்ப அர்ஸ்தீப் சிங் வேண்டும் என்று இறக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.