ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக திகழும் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் கம்மின்ஸ் தான் பார்த்து ரசிக்கும் இரண்டு பந்துவீச்சாளர்களின் பெயரை குறிப்பிட்டு கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலியாவின் கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்கு பிறகு அணியை சிறப்பாக வழிநடத்தும் வீரராக திகழ்ந்தவர் பேட் கம்மின்ஸ். அவரது தலைமையில் ஆஸ்திரேலியா அணி ஆஷஸ் டெஸ்ட் தொடர், ஒரு நாள் உலகக் கோப்பை, இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் பல்வேறு குறிப்பிடத்தக்க கோப்பைகளை வென்று சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணியை வழிநடத்திய கம்மின்ஸ் இறுதிப்போட்டி வரை அணியை கொண்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேப்டன் மட்டுமல்லாமல் தனது அபார பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்க வைப்பதில் எப்போதுமே முன்னோடியாக திகழ்கிறார். இந்த சூழ்நிலையில் தனது கிரிக்கெட் வாழ்வில் தான் ஒரு பந்துவீச்சாளராக இருந்தாலும், தான் பார்த்து ரசிக்கக்கூடிய இரண்டு வீரர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ககிசோ ரபாடா என இருவரை தேர்வு செய்திருக்கிறார். இவர்கள் இருவரின் பந்துவீச்சை தான் ரசிப்பதாக சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
தான் ரசித்த இரண்டு பவுலர்கள்
இதுகுறித்து கம்மின்ஸ் விரிவாக கூறும்போது “ரபாடா மற்றும் பும்ரா இருவரும் தான் பார்த்து ரசிக்கக் கூடிய மிக அற்புதமான பந்துவீச்சாளர்களாக இருக்கின்றனர். அவர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்த்தி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக சில அற்புதமான போட்டிகளை நாங்கள் விளையாடி இருக்கிறோம். நான் டெஸ்ட் கிரிக்கெட்டை முதன்மையாக நேசிக்கிறேன்.
இதையும் படிங்க:பிளேயிங் 11 பிரச்சனை.. கௌதம் கம்பீர் மீது ரிஷப் பண்ட் அதிருப்தி.. வெளிவந்த முக்கிய தகவல்.. முழு விபரம்
அதனால் அதை முதன்மையான முன்னுரிமையாக வைத்திருப்பது எப்போதும் எளிதான முடிவாகும். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டை இவ்வளவு சிறப்பாக ஆதரிப்பது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்” எனக் கூறியிருக்கிறார். காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் அதற்குப் பிறகு சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் கம்மின்ஸ் அணியை வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கலாம். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை முதல் நடைபெற உள்ள நிலையில் அதற்குப் பிறகு நாளை மறுநாள் இந்திய அணிக்கு எதிராக வங்கதேச அணி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.






