நேற்று ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கனோலி சதம் அடித்தாலும் இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஹாட்ரிக் தோல்விகள்
முதல் ஏழு போட்டிகளில் பஞ்சாப் அணி ஒரு தோல்வி கூட அடையாமல் 13 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. இந்த நிலையில் இதற்கு அடுத்த மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து பின்தங்கி உள்ளது.
தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி இன்னும் ஒரு தோல்வியை சந்தித்தால் கூட அந்த அணிக்கு நெருக்கடி மிகவும் அதிகமாக மாறிவிடும். மேலும் தொடர்ந்து பீல்டிங்கில் கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டு வருவது பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது.
நாங்கள் இதனால் தோல்வியடைகிறோம்
இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது “நாங்கள் இந்த போட்டியில் பல கேட்ச் வாய்ப்புகளை ஆரம்பத்திலேயே தவற விட்டோம். நாங்கள் அதை சரியாக பயன்படுத்தி இருந்தால் எங்களால் அவர்களை நான் 30 முதல் 40 ரன்கள் குறைவாக கட்டுப்படுத்தி இருக்க முடியும். இந்த ஆடுகளத்தில் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு அவர்கள் காட்டி இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : சிஎஸ்கே பிளேஆப் வாய்ப்பு எப்படி உள்ளது?.. 2 போட்டிகளில் அடிக்க இருக்கும் லக்.. யார் பிரச்சனை?
“இந்த ஆடுகளம் இரண்டாவது பேட்டிங் செய்யும்பொழுது எங்களுக்கு கொஞ்சம் மெதுவாக மாறிவிட்டது இதனால் உள்ளே வரக்கூடியவர்கள் எடுத்ததும் அதிரடியாக விளையாட முடியவில்லை. கானோலி மிகவும் சிறந்த வீரர் அவர் ஏற்கனவே என்ன செய்ய முடியும் என்பதை காட்டி இருக்கிறார். நாங்கள் பீல்டிங்கில் பெரிய தவறுகள் செய்வது தொடர் தோல்விக்கு காரணமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






