நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றுடன் முதல் சுற்று போட்டிகள் முடிவுக்கு வருகின்றன. இதைத்தொடர்ந்து இரண்டாவது சுற்று போட்டிகள் நாளை மறுநாள் நடைபெற இருக்கின்றன. இந்த நிலையில் இரண்டாவது சுற்றில் தென் ஆப்பிரிக்க அணியை இந்திய அணி வெல்லும் என ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.
தற்போது டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு அடுத்து பலமான அணியாக தென் ஆப்பிரிக்கா இருந்து வருகிறது. எனவே இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டிக்கு எதிர்ப்பார்ப்புகள் மிக அதிகமாக உருவாகியுள்ளது.
தப்பித்த தென் ஆப்பிரிக்கா
இந்த உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு சூப்பர் ஓவர்களுக்கு சென்று இறுதியில் கடைசி பந்தில் வென்றது. ஒருவேளை அந்த போட்டியில் தோல்வி அடைந்து இருந்தால் தற்போதைய நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.
இதே போல இந்திய அணி தங்களது முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக 77 ரன்னுக்கு ஆறு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி, சூரியகுமார் பேட்டிங் காரணமாக வென்றது. இதற்குப் பிறகு இரு அணிகளின் செயல்பாடுகள் உயர்தரத்துக்கு மாறியிருக்கின்றன.
இவர்கள்தான் காரணம்
இந்த போட்டி குறித்து பேசி உள்ள ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது ” தென் ஆப்பிரிக்காவிடம் சிறந்த பவுலிங் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் இந்திய அணியில் மரபு சாராத பவுலர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக வித்தியாசமான ஆக்சன் கொண்ட பும்ரா இருக்கிறார். அவரது மணிக்கட்டு பொசிஷன் மிகவும் அற்புதமாக இருக்கும். பவர் பிளே, மிடில் ஓவர், கடைசி கட்ட ஓவர்கள் என எல்லா பக்கத்திலும் அவர் அசாதாரணமாக பந்து வீசுவார்”
இதையும் படிங்க: எங்க தெஆ இந்தியாவுக்கு சமமானது.. ஆனா இந்த 2 இந்திய வீரர்கள்தான் பயமே.. ஜெயிக்க விடமாட்டாங்க – பொல்லாக் கருத்து
“இதற்கடுத்து அவர்களிடம் வருண் சக்கரவர்த்தி இருக்கிறார். அவர் இடதுகை, வலதுகை பேட்ஸ்மேன்கள் யாராக இருந்தாலும் சிறப்பாக பந்து வீசி ஆதிக்கத்தை செலுத்த முடியும். எனவே தென் ஆப்பிரிக்க அணியை விட இந்திய அணி பந்துவீச்சில் முன்னிலையை பெற்று இருக்கிறது. இதுதான் அவர்களை வெற்றி பெற வைக்கும் காரணியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






