கில்லை சாதாரணமா நினைக்கிறீங்க.. ஆனா அவர் என்னை மாதிரி.. நேர்ல பார்த்தேன் – ரிக்கி பாண்டிங் பாராட்டு

0
67
Gill

இந்திய அணியின் மீது சுப்மன் கில் சரியான நேரத்தில் தனது அதிகாரத்தை எப்படி செலுத்தினார்? என்பது குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை தொடர்ந்து தற்போது சுப்மன் கில்லுக்கு இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன் பொறுப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் கேப்டனாக திறமையாக செயல்படுவார் என ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து தொடரில் அசத்தல்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பு சுப்மன் கில்லுக்கு கொடுக்கப்பட்ட பொழுது அதற்கு முன்பாக ஆசியா தாண்டி அவர் டெஸ்ட் சதம் அடிக்காமல் இருந்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் மொத்தம் நான்கு சதங்களுடன் 752 ரன்கள் குவித்தார்.

மேலும் பேட்ஸ்மேனாக மட்டும் இல்லாமல் கேப்டனாகவும் அணிக்கு தேவைப்பட்ட பொழுது முன்னே நின்று செயல்பட்டார். கிரிக்கெட் உலகில் ஆக்ரோஷமான கேப்டன் என்று பெயரெடுத்த ரிக்கி பாண்டிங் தன்னைப் போலவே சரியான முறையில் ஆக்ரோஷத்தை கில் வெளிப்படுத்தினார் என்று பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

சரியான நேரத்தில் செய்தார்

இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “கில் இங்கிலாந்து தொடரில் கேப்டனாக வெளிப்பட்ட ஆக்ரோஷமான விதத்தை நான் உண்மையில் விரும்பினேன். சில நேரங்களில் தன்னுடைய அமைதியான இயல்பிலிருந்து அவர் வெளியில் வந்து ஆக்ரோஷமாக செய்தார். அணிக்காக அவர் நின்ற விதம் மற்றும் பேட்ஸ்மேனாகவும் களத்தை விட்டு தராமல் அவர் போராடியது என்னை வெகுவாக கவர்ந்து விட்டது”

இதையும் படிங்க : சர்பராஸ் கானுக்காக எனக்கு கண்ணீர் வருகிறது.. அவருக்கு இந்த தப்ப நீங்க செஞ்சிருக்க கூடாது – அஸ்வின் வருத்தம்

” எப்போதாவது ஒரு கடினமான சூழ்நிலை வரும் பொழுது அங்கே ஒரு கோட்டை வரைய வேண்டிய தேவை அவருக்கு உருவாகியது. அந்த விஷயத்தை அவர் சரியாகவே செய்தார். அவர் எப்பொழுதும் சாந்தமான அமைதியான இயல்பு கொண்டவர். தேவையான நேரத்தில் ஆக்ரோஷமான புல்டாக் குணத்தை காட்டினார். சரியான நேரத்தில் அணியின் மீது தனது அதிகாரத்தை நிலை நாட்டினார். நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு வீரரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -