சர்பராஸ் கானுக்காக எனக்கு கண்ணீர் வருகிறது.. அவருக்கு இந்த தப்ப நீங்க செஞ்சிருக்க கூடாது – அஸ்வின் வருத்தம்

0
36
Ashwin

தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய ஏ அணியில் சர்ப்ராஸ் கான் தேர்வு செய்யப்படாதது தவறானது என ரவிச்சந்திரன் அஸ்வின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்பாக இந்திய ஏ அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரில் சர்பராஸ் கான் தேர்வு செய்யப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

அஸ்வின் விமர்சனம்

இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார். சர்பராஸ் கான் தன்னை நிரூபித்து காட்ட இருந்த ஒரு கதவையும் அடைத்து விட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” இதில் பிரச்சனை என்னவென்றால் தேர்வு செய்வதற்கான தொடர்பு கொள்ளுதலில் இருக்கிறது. ஏ அணிக்கு சுப்பிரமணியம் பத்ரிநாத் பல ஆண்டுகள் விளையாடி கேப்டன் ஆகவும் இருந்தார். அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்யவில்லை. இதேதான் மனோஜ் திவாரிக்கும் நடந்தது. நாங்கள் உங்களை இந்திய ஏ அணியில் அதிக காலம் பார்த்து விட்டோம் இனி உங்களிடம் புதிதாக பார்க்க எதுவும் இல்லை. எனவே நாங்கள் புதிய முகங்களை பார்க்க விரும்புகிறோம் என்பது தான் செய்தி”

- Advertisement -

எனக்கு கண்ணீர் வருகிறது

“ஆனால் நாம் சர்பராஸ் கான் விஷயத்தில் அவரை இந்திய ஏ அணியில் அதிகம் பார்த்து விட்டோம் என்று கூறி நீக்க முடியாது. ஏனென்றால் தற்போது அபிமன்யு ஈஸ்வரனை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவர் இந்திய ஏ அணிக்கு பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார்”

இதையும் படிங்க : கோலி, ரோகித் குறித்து நாங்கள் தலையிட மாட்டோம்.. இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் கருத்து

“சர்பராஸ் கான் உள்நாட்டு கிரிக்கெட்டில் மட்டுமே நன்றாக விளையாட கூடியவர் என முத்திரை குத்தப்படலாம். அவர் தன்னை நிரூபிக்க இந்திய ஏ அணியில் வாய்ப்பு தரப்படாது. அதற்கான கதவுகளை சாத்திவிட்டார்கள். அவரது நிலையை நினைக்கும்பொழுது எனக்கு கண்ணீர் வருகிறது. நான் தேர்வாளராக இருந்தால் என்ன செய்வேன் என யோசிக்கிறேன். அவரை கட்டாயம் இந்திய ஏ அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -