18வது சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் சென்றுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்ச்சியாளரான ரிக்கி பாண்டிங் ரிஷப் பண்ட்டை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யாமல் ஸ்ரேயாஸ் ஐயரை எடுத்தது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
துபாயில் ஐபிஎல் மெகா ஏலம்
இந்தியாவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐபிஎல் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான மெகா ஏலம் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு கொண்டிருந்த ரிக்கி பாண்டிங் டெல்லி அணியில் இருந்து விலகி பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.
மேலும் சமீபத்தில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் டெல்லி அணி ரிஷப் பண்டை தக்க வைக்காமல் விட்டது. இதனால் பாண்டிங்கின் விருப்பமான வீரராக கருதப்படும் ரிஷப் பண்ட் பஞ்சாப் அணிக்காகத்தான் விளையாடுவார் என்று எல்லோராலும் கருதப்பட்ட நிலையில் பஞ்சாப் அணி எதிர்பாராத விதமாக ஸ்ரேயாஸ் ஐயரை 26.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மேலும் அதற்குப் பிறகு ஏலத்திற்கு வந்த ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி வாங்கியது. இந்த சூழ்நிலையில் இது குறித்து தற்போது பாண்டிங் விளக்கம் அளித்திருக்கிறார்.
ஸ்ரேயாஸ் ஐயரை எடுக்க காரணம் – பாண்டிங்
இதுகுறித்து அவர் கூறும் போது “எனக்கு ஒன்று கிடைக்காமல் மற்றொன்று கிடைத்திருக்கிறது. நான் ரிஷப் பண்ட் பற்றி கூறுகிறேன். ரிஷப் பண்ட் மதிப்பு என்ன என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். விளையாட்டின் மதிப்போடு ஒரு அணிக்கு அவரது மதிப்பு நன்றாக தெரியும். அவர் ஒரு ஆற்றல் மிக்க வீரர். அவர் விளையாட்டை நேசிக்கக் கூடிய ஒரு இயற்கையான வெற்றியாளர். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரோடு நான் கடந்த காலத்தில் ஏற்கனவே பணியாற்றி இருக்கிறேன்.
இதையும் படிங்க:தோனி இடமிருந்து வந்த போன்.. ஆப்கான் வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. மிரண்டு போன குஜராத் டைட்டன்ஸ்
அவர் ஐபிஎல்லில் ஒரு வெற்றிகரமான கேப்டனாக இருந்துள்ளார். அவருடன் நான்கு ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. நிச்சயமாக அவர் கடந்த சீசனில் ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்ற ஒரு கேப்டனாக இருக்கிறார்.எனவே அந்த வகையில் சிந்தித்தால் ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்று தரக்கூடிய ஒரு வீரரை நாங்கள் பெற்றிருக்கிறோம். கேப்டன் பொறுப்பு குறித்து அவரிடம் இன்னும் நான் பேசவில்லை. ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக அவரது தொலைபேசிக்கு முயற்சி செய்தேன், ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.






