தோனி இடமிருந்து வந்த போன்.. ஆப்கான் வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. மிரண்டு போன குஜராத் டைட்டன்ஸ்

0
1543
Dhoni

சிஎஸ்கே ஏலக்குழு வழக்கம் போல் ஐபிஎல் மகா ஏலத்தில் கலக்கலாக செயல்பட்டு இருக்கிறது. குஜராத் பயன்படுத்திய ஆர்டிஎம்ஐ உடைத்து சிறப்பான முறையில் ஆப்கானிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் நூர் அகமதை வாங்கி ஆச்சரியப்படுத்தியது.

இந்த முறை நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி தற்பொழுது 11 வீரர்களை வாங்கியிருக்கிறது. வாங்கி இருக்கும் இந்த 11 வீரர்களை அப்படியே களத்தில் இறக்கி விளையாட வைக்கலாம் என்பது போல சரியான வீரர்களை வாங்கியிருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே வாங்கி இருக்கும் வீரர்கள்

நடப்பு ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே டெவோன் கான்வே 6.25, ராகுல் திரிபாதி 3.40, ரச்சின் ரவீந்தரா 4.00, ரவிச்சந்திரன் 9.75, கலீல் அகமது 4.80 கோடி என ஐந்து வீரர்களை சரியாக பிளேயிங் லெவனில் வைப்பது போல வாங்கி அசத்தியது. இதில் ஏற்கனவே விளையாடிய இரண்டு வீரர்களை வாங்கியதோடு ரவிச்சந்திரன் அஸ்வினை வாங்கியதில் சி எஸ் கே ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து ஏலத்தில் சிஎஸ்கே அணியின் ஆறாவது வீரராக ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் மற்றும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய நூர் அகமதுவை 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. மேலும் இவர் சேப்பாக்கம் ஆடுகளத்திற்கு மிகவும் சரியாக இருப்பார்.

- Advertisement -

ஏலத்தில் நடந்த சுவாரசியம்

தற்போது நடந்து கொண்டிருக்கும் ஏலத்தில் நூர் அகமது வந்ததும் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் போட்டியிட்டன. சிஎஸ்கே அணி 5 கோடி ரூபாய்க்கு கேட்க மும்பை அணி ஏலத்தில் இருந்து விலகிக் கொண்டது. இதைத்தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி ஆர்டிஎம் போட்டது. எனவே சிஎஸ்கே நூர் அகமதுவுக்கு எவ்வளவு தரமுடியும்? என ஏலத்தை நடத்துபவர் கேட்டார்.

இந்த நிலையில் சிஎஸ்கே ஏலக்குழுவில் இருப்பவர் போனில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சேலத்தில் சிஎஸ்கே இருக்கும் பொழுது வெளியில் இருந்து தோனி அவர்களுடன் எப்பொழுதும் தொடர்பில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் போனில் பேசி முடித்துவிட்டு சிஎஸ்கே அணி எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக ஐந்து கோடி ரூபாய்க்கு கேட்ட வீரரை 10 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக கூறியது.

இதையும் படிங்க : 60 ரன் 6 விக்கெட்.. ரிஸ்வானின் பாகிஸ்தான் அணி சொதப்பல்.. ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி.. முதல் ஓடிஐ

இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி நூர் அகமதுவை வாங்காமல் விட்டது. சென்னை சேப்பாக்கத்திற்கு சரியான ஆளாக இருப்பார் என 5 கோடி ரூபாய்க்கு கேட்ட வீரரை இன்னும் 5 கோடி ரூபாய் சேர்த்து கொடுத்து சிஎஸ்கே வாங்கி இருக்கிறது. தோனி நூர் அகமதுவுக்கு 10 கோடி ரூபாய் கொடுக்க சொல்ல சிஎஸ்கே ஏலக்குழு வாங்கி இருப்பதாக சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -