எங்க ஆள் ஸ்டார்க்.. ஐபிஎல்ல ஆரம்பத்துல சரியா ஆடாததுக்கு காரணம் இதுதான் – ரிக்கி பாண்டிங் விளக்கம்

0
813
Ponting

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை மிகவும் ஆச்சரியத்துடன் ஆரம்பித்த ஸ்டார்க், அடுத்து நிறைய கேலி கிண்டல்களை சந்தித்து தற்பொழுது அவருடைய பாணியில் அசத்தலாக முடித்திருக்கிறார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் அவரால் ஏன் சிறப்பாக செயல்பட முடியவில்லை என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி ஸ்டர்க்கை 24.75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. ஐபிஎல் ஏல வரலாற்றில் ஒரு வீரருக்கு கொடுக்கப்பட்ட மிக அதிகபட்ச தொகை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய நாள் ஏலத்தில் இது எல்லோராலும் மிகப்பெரிய ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியால் நல்ல முறையில் செயல்பட முடியாததற்கு இருந்த சில காரணங்களில் முக்கியமான காரணம் அவர்களுக்கு நல்ல ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் இல்லை என்பதுதான். ஸ்ரேயாஸ் ஐயர் திரும்பி வந்து விட்டதாலும், ஜேசன் ராய் இடத்தில் பில் சால்ட் கிடைப்பதாலும், புதிய பந்து மற்றும் பழைய பந்தில் சிறப்பாக செயல்பட முடிந்த ஸ்டார்க்கை வாங்க கையில் இருக்கும் முழு தொகையையும் செலவிடலாம் என கம்பீர் முடிவு செய்தார்.

கம்பீர் செய்த இந்த மிகச் சரியான முடிவு கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. ஆரம்பத்தில் பெரிய அளவில் செல்ல முடியாத ஸ்டார்க், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆப் சுற்றி இரண்டு போட்டிகளிலும் மிரட்டல் பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அவருடைய வழக்கமான ஸ்விங் யார்க்கர்கள் விழுந்து தெறித்தது. மேலும் மொத்தமாக 17 விக்கெட் கைப்பற்றி, ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

இவர் குறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “பெரிய விலைக்கு வாங்கப்படுகின்ற காரணத்தோடு உள்ளே வரும் வீரர்களுக்கு எப்பொழுதும் பெரிய அழுத்தம் இருக்க செய்கிறது. எனவே அவர்கள் வழக்கமாக செய்வதை விட அதிகம் செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிறது. உங்களுக்கு தெரியும் ஈடன் கார்டனில் ஸ்டார்க் பந்து வீசும் பொழுது பந்து ஸ்விங் ஆகவில்லை. இந்த ஆண்டு அந்த மைதானம் சிறியது போலவும், அவுட் ஃபீல்டு கான்கிரீட் போலவும் இருந்தது ஸ்டார்க் சிறப்பாக செயல்பட முடியாததற்கு முக்கிய காரணமாக அமைந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க: கம்மின்ஸ்க்கு கொடுத்த காசு நியாயமா?.. இந்த ஐபிஎல்ல என்ன செஞ்சார் – நவ்ஜோத் சிங் சித்து பேட்டி

மேலும் நடப்பு ஐபிஎல் தொடர் குறித்து பேசி இருந்த ஸ்டார்க் கூறும்பொழுது “இந்த ஐபிஎல் சீசனை நான் முழுவதுமாக அனுபவித்து மகிழ்ந்தேன். இது என்னை அடுத்து டி20 உலகக்கோப்பைக்கு கூட்டிச் செல்கிறது. இங்கு சில பெரிய வீரர்களுக்கு எதிராக விளையாடியது உலகக்கோப்பையில் நன்மையைத் தரும். அடுத்தஆண்டு கிரிக்கெட் அட்டவணை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு நான் திரும்பி வருவதற்கு ஆவலாக இருக்கின்றேன்” என்று கூறியிருக்கிறார்