கம்மின்ஸ்க்கு கொடுத்த காசு நியாயமா?.. இந்த ஐபிஎல்ல என்ன செஞ்சார் – நவ்ஜோத் சிங் சித்து பேட்டி

0
114
Cummins

நடந்து முடிந்த 17வது ஐபிஎல் சீசனில், சில அணி நிர்வாகங்கள் எடுத்த முடிவுகள் ஆரம்பத்தில் மிகப்பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளானது. இதில் ஹைதராபாத் அணி 20.50 கோடி கொடுத்து பாட் கம்மின்சை வாங்கியதும் பெரிய விவாதத்திற்கு வந்தது. இந்த நிலையில் ஹைதராபாத் அணியின் அணுகுமுறை குறித்து விமர்சித்து வந்த நவ்ஜோத் சிங் சித்து தற்பொழுது பாராட்டி இருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 20 கோடியை தாண்டி கொடுத்து ஹைதராபாத் அணி நிர்வாகம் கம்மின்சை வாங்கியது. ஆஸ்திரேலியா பயிற்சியாளர் டேனியல் வெட்டேரி ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக இருக்கின்ற காரணத்தினால்தான், இவ்வளவு தொகைக்கு கம்மின்ஸ் வாங்கப்பட்டார் என்று விமர்சனங்கள் செய்யப்பட்டது.

- Advertisement -

மேலும் கம்மின்ஸ் ஹைதராபாத் அணி அமைக்கப்பட்டிருக்கும் விதத்திற்கு உள்ளே வந்தால், எய்டன் மார்க்ரம், கிளன் பிலிப்ஸ் மற்றும் மார்க்கோ யான்சன் போன்ற வீரர்கள் விளையாட முடியாது, அப்படி விளையாட முடியாவிட்டால் ஹைதராபாத் அணிக்கு பெரிய சிக்கல் உண்டாகும் என்று விமர்சிக்கப்பட்டது.

இப்படியான நிலையில் அவரை வாங்கியதோடு அனைத்து போட்டியிலும் அவரை விளையாடு வைக்கும் விதமாக கேப்டனாகவும் ஹைதராபாத் அணி அறிவித்தது. இது அப்போது எல்லோருக்கும் பெரிய ஆச்சரியத்தை உண்டு செய்தது. இப்படியான நிலையில்தான் ஹைதராபாத் அணியின் பலம் பேட்டிங் என கண்டுபிடித்து, அதை வைத்து அணியை இறுதிப்போட்டி வரை கம்மின்ஸ் கொண்டு வந்தார். ஆனால் ஸ்பின்னர்ககளை பயன்படுத்தாதது குறித்து நவ்ஜோத் சிங் சித்து கம்மின்ஸ் கேப்டன்சி குறித்து கடுமையான விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் கம்மின்ஸ் கேப்டன்சி பற்றி பேசி இருக்கும் நவ்ஜோத் சிங் சித்து “அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு அமைதியான மனிதராக இருந்தார். அவர் ஹைதராபாத் அணியை மிகவும் அருமையாக வழிநடத்தினார். 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அவர்களை இறுதிப் போட்டிக்கு கூட்டி வந்தார். ஹைதராபாத் அணி உரிமையாளர் அவருக்கு கொடுத்த ஒவ்வொரு பைசாவும் மிகவும் நியாயமானது. அணியை முன்னின்று வழிநடத்தியதோடு வீரர்களை அவர் கோபமாக ஒரு இடத்தில் கூட நடத்தியது கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : சிஎஸ்கே மாதிரி.. உள்ளூர் டி20 லீக்ல ஆடற பசங்கள ஐபிஎல் கொண்டு வராதிங்க – கவாஸ்கர் கோபம்

அவர் இந்த ஐபிஎல் சீசனின் ஆரம்பத்திலிருந்து வீரர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் தொடக்கத்தில் இருந்து மிகவும் பரபரப்பாக இருந்தார். இந்த அணிக்காக விளையாடியதில் அவருக்கு ஒரு கேப்டனாக மிகப்பெரிய பங்கு இருக்கிறது” எனக் கூறி தற்பொழுது பாராட்டி இருக்கிறார்.