இங்கிலாந்த நான் ஜெயிக்காததா.. இந்திய பேட்டிங் ஆர்டர் இப்படி இருந்தா மாஸ் காட்டலாம் – ரிக்கி பாண்டிங் அறிவுரை

0
36
Ricky

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை எப்படி இருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அறிவுரை கூறியிருக்கிறார்.

இந்த மாதம் ஜூன் 20ஆம் தேதி முதல் இந்திய அணி இங்கிலாந்து சென்று அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. புதிய இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி செல்வதோடு, அனுபவ வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இல்லாததால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

ஓபனர்ஸ் இவங்கதான்

இந்த நிலையில் இந்திய பேட்டிங் ஆர்டர் எப்படி அமைய வேண்டும் என ரிக்கி பாண்டிங் யாரும் எதிர்பார்க்காத வகையில் கூறியிருக்கிறார். மேலும் ஏன் இந்த வரிசையில் மிடில் ஆர்டர் அமைய வேண்டும் என்பது குறித்தும் அவர் மிக விளக்கமாக பேசியிருக்கிறார். குறிப்பாக துவக்க இடத்தில் அனுபவம் பெரிய அளவில் இல்லாத இளம் வீரர்களை அவர் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “சாய் சுதர்சன் எனக்கு ஒரு தரமான வீரராக தெரிகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொழில்நுட்ப ரீதியாக அவர் மிகவும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைக்கிறேன். எனவே இங்கிலாந்தில் ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக போட்டியை துவங்க வேண்டும்”

- Advertisement -

கில்லுக்கு இதுதான் நல்லது

“துவக்க இடத்தில் இரண்டு இளம் வீரர்கள் இருக்கின்ற காரணத்தினால் மூன்றாவது இடத்தில் அனுபவம் வாய்ந்த வீரரான கேஎல்.ராகுலை வைத்துக் கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் கில் பேட்டிங் செய்யலாம். ஏனென்றால் ஒரு புதிய கேப்டனாக வரக்கூடிய அவருக்கு இந்த இடம் கொஞ்சம் வசதியானதாக இருக்கும்”

இதையும் படிங்க : பும்ரா 5 டெஸ்டிலும் ஆட என்கிட்ட ஐடியா இருக்கு.. இத செய்யலனா செமையா மாட்டுவிங்க – முன்னாள் கோச் பேட்டி

“தற்போது கில் ஒரு இளம் கேப்டனாக இருக்கின்ற காரணத்தினால் அவர் துவக்க இடத்திலோ அல்லது மூன்றாவது இடத்திலோ பேட்டிங் செய்ய தேவை கிடையாது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிக்கு வரிசை ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன் கேஎல்.ராகுல், கில் மற்றும் கருண் நாயர் என்று அமைய வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -