பும்ரா 5 டெஸ்டிலும் ஆட என்கிட்ட ஐடியா இருக்கு.. இத செய்யலனா செமையா மாட்டுவிங்க – முன்னாள் கோச் பேட்டி

0
62
Bumrah

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளும் பும்ராவை விளையாட வைக்க என்ன செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறியிருக்கிறார்.

மேலும் பும்ராவின் பணிச்சுமையை நிர்வகிப்பதில் அதிக பந்துவீச்சு காயத்தை உண்டாக்குவது போல குறைந்த பந்து வீச்சும் காயத்தை உண்டாக்கும் எனவும், எனவே அதற்கு தகுந்தபடி அவருடைய பயிற்சியை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இரண்டுமே ஆபத்தானது

இதுகுறித்து பரத் அருண் பேசும் பொழுது “அதிகமாக பந்து வீசுவது மற்றும் குறைவாக பந்து வீசுவது இரண்டுமே காயத்தை உருவாக்கும். இது ஒரு பந்துவீச்சாளருக்கு காயத்தை உருவாக்குவதற்கான சரியான கலவையாகும். மேலும் ஒரு போட்டியில் பும்ரா எத்தனை ஓவர் பந்து வீசுவார் என்பதை நாம் வெளியில் இருந்து முடிவு செய்ய முடியாது”

“அதே சமயத்தில் அவர் போட்டியில் அதிக ஓவர்கள் பந்து வீச வேண்டி இருந்தால், அவருக்கு பயிற்சி அமர்வுகளை மாற்றி அமைக்க வேண்டும். அவர் ஜிம்மில் வேலை செய்வது, அல்லது பிசியாவுடன் ரெக்கவரி சம்பந்தமாக ஏதாவது வேலை செய்வது என நேரத்தை பிரித்துக் கொள்ள வேண்டும். அவருடைய பணிச்சுமையை நிர்வகிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக அமைகிறது”

- Advertisement -

பும்ரா ஐந்து டெஸ்ட் விளையாட முடியும்

“பும்ரா அணியில் இருப்பது நம்பிக்கையையும் மதிப்பையும் அதிகரிக்கச் செய்யும். எனவே அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் இருப்பார் என்று நினைக்கிறேன். அதற்கு மற்ற பந்துவீச்சாளர்களிடமிருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்கும் என்றால், உம்ராவை ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கும் அணியில் வைத்துக்கொள்ள முடியும்”

இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட்.. வாய்ப்பை இழக்கும் இந்திய வீரர்.. ரெடியான பேட்டிங் யூனிட் பட்டியல்.. வெளியாகும் புதிய செய்திகள்

“அதே சமயத்தில் ஒவ்வொரு போட்டியிலும் அவருக்கு வேலை மிகவும் அதிகமாக இருக்கும் என்றால் அவரால் 5 டெஸ்ட் போட்டி விளையாட முடியாது என்று நான் பயப்படுகிறேன். எனவே மற்ற பந்துவீச்சாளர்கள் அவருக்கு எந்த அளவுக்கு பந்துவீச்சில் ஆதரவாக இருக்கிறார்கள் என்பது முக்கியம். மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டால் அவரால் ஐந்து டெஸ்ட் போட்டியிலும் விளையாட முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -