இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட இந்த ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுப்பயணம் செய்கிறது. இந்த தொடரில் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்யும் இடம் குறித்து ஒரு சந்தேகம் இருப்பதாக ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.
கடந்த இரண்டு முறையாக சொந்த நாட்டில் இந்திய அணியிடம் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி இழந்திருக்கும் காரணத்தினால், மீண்டும் இந்திய அணியை உள்நாட்டில் வெல்வதற்காக எல்லா வகையான முயற்சிகளையும் செய்து வருகிறது. அதே சமயத்தில் அவர்களுடைய பேட்டிங் வரிசையில் சில உறுதியற்ற நிலை காணப்படுகிறது.
டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும் ஸ்டீவ் ஸ்மித் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கி வருகிறார். முன்பு மூன்று அல்லது நான்காவது இடத்தில் பேட்டிங் செய்து வந்தார். மேலும் அவருக்கு துவக்க இடம் சரியானதாக அமையவில்லை.
ஸ்டீவ் ஸ்மித் துவக்க ஆட்டக்காரராக வந்ததால் கேமரூன் கிரீன் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்திற்கு உயர்த்தப்பட்டார். நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடி சதம் அடித்து ஒரு போட்டியை வென்றும் கொடுத்திருக்கிறார். அந்த இடத்தில் கேமரூன் கிரீன் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.
எனவே இந்திய சுற்றுப்பயணத்தில் இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் என்ன முடிவு எடுக்கும்? என்பது தற்பொழுது சுவாரசியமான ஒன்றாக இருக்கிறது. பும்ரா மற்றும் சமி போன்ற சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் கைகளில் புதிய பந்து இருக்கும்பொழுது, ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஒரு பேட்ஸ்மேன் விக்கெட்டை பணயம் வைக்க ஆஸ்திரேலியா யோசிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்திய அணி நட்சத்திர வீரர்கள் ஆடும் துலீப் டிராபி.. போட்டி அட்டவணை அறிவிப்பு.. முழு விபரங்கள்
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “இந்த விஷயத்திற்கு ஆஸ்திரேலியாவே தனக்கான சரியான வீரரை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்று நான் நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவிடம் ஒரே ஒரு கேள்வி மட்டுமே இருக்கும். அது பேட்டிங்கை தொடங்குவதற்கு ஸ்மித் சரியான வீரரா? என்பதுதான்.ஆனாலும் கூட அது கேமரூன் கிரீன் மீண்டும் ஆஸ்திரேலியா அணியில் இணைகிறாரா? என்பதை பொறுத்துதான் அமையும்” என்று கூறி இருக்கிறார்.






