நான் முடிவை மாத்திக்கிறேன்.. இந்திய டெஸ்ட்ல ஆஸி டீம்ல இந்த பையன ஓபனரா வைங்க – ரிக்கி பாண்டிங் பேட்டி

0
974
Ponting

இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா வீரராக இந்திய ஏ அணியின் கேப்டனை துவக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் என ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் இந்த மாதம் நவம்பர் 22ஆம் தேதி முதல் இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது டேவிட் வார்னர் ஓய்வு பெற்றிருக்கின்ற காரணத்தினால் துவக்க இடத்தில் யார் களமிறங்குவது? என்பது கேள்வியாக இருந்து வருகிறது.

- Advertisement -

மூன்று முக்கிய பெயர்கள்

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் டேவிட் வார்னர் இடத்தில் மூத்த வீரர்களான கேமரூன் பான்கிராப்ட், மார்க்கஸ் ஹாரிஸ் ஆகியோர் இருக்கிறார்கள். இளம் வீரராக சாம் கான்ஸ்டாஸ் இருக்கிறார். இந்த மூவருக்கும் மாற்றி மாற்றி ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ரிக்கி பாண்டிங் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துவக்க ஆட்டக்காரர் இடத்துக்கு ஆஸ்திரேலியா ஏ அணியின் கேப்டன் நாதன் மெக்ஸ்வீனியை பரிந்துரை செய்திருக்கிறார். இதற்கு முன்பாக ரிக்கி பாண்டிங் இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸை பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நான் முடிவை மாற்றிக் கொள்கிறேன்

இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “நான் ஒரு வாரத்திற்கு முன்பு சாம் கான்ஸ்டாஸ் துவக்க வீரராக இருக்க வேண்டும் என்று கூறினேன். அவர் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மீண்டும் ஒரு சதம் அடித்திருந்தார். ஆனால் அவர் இளமையாக இருக்கிறார். இதனால் நான் கொஞ்சம் பொறுமையாக யோசித்தேன். மேலும் அவர் பெர்த் மற்றும் காபா மைதானங்களில் விளையாடவும் இல்லை”

“அடிலெய்டு மைதானத்தில் அவர் பிங்க் பந்து டெஸ்டிலும் விளையாடியது கிடையாது. எனவே அவருக்கு எதிராக நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஆனாலும் அவருக்கு திறமை இருக்கிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை”

இதையும் படிங்க : பிரித்வி ஷாவை விட.. கில் பெரிய ஆளா வருவாருன்னு அப்பவே சொன்னேன்.. காரணம் இதான் – சைமன் டால் பேட்டி

“குயின்ஸ்லாந்தில் பிறந்து தற்பொழுது தெற்கு ஆஸ்ட்ரேலியாவுக்காக விளையாடிக் கொண்டிருக்கும்,மேலும் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு கேப்டனாக இருக்கும் நாதன் மெக்ஸ்வீனி பெயர் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். தற்பொழுது ஆஸ்திரேலியா ஏ அணிக்கு அவர் சிறப்பாக விளையாடியிருக்கிறார். எனவே இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துவக்க ஆட்டக்காரராக அவர் இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -