இந்திய கிரிக்கெட்

அர்ஷ்தீப் மயங்க் யாதவ் இல்ல.. ஆஸிக்கு இந்த இடதுகை ஃபாஸ்ட் பவுலர்தான் வரனும் – ரிக்கி பாண்டிங் விருப்பம்

இந்திய அணி இந்த வருடம் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் இந்தத் தொடருக்கு இந்திய அணியில் 26 வயதான ஒரு புது பந்துவீச்சாளர் வருவார் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இதுவரையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நான்கு போட்டிகள் கொண்ட தொடராகவே நடந்து வந்திருக்கிறது. இந்த ஆண்டு முதல் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய டெஸ்ட் அணியில் நீண்ட நாட்களாக ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கான இடம் காலியாகவே இருந்து வருகிறது. இந்த இடத்திற்கு அர்ஸ்தீப் சிங் சரியானவராக இருப்பார் என்று இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் நம்பி வருகிறார்கள். எனவே இவர் ஆஸ்திரேலியா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில் ஐபிஎல் தொடரில் மணிக்கு 156 கிலோ மீட்டருக்கு மேல் வேகத்தில் வீசிய லக்னோ அணிக்காக விளையாடிய டெல்லி வீரர் மயங்க் யாதவ் ஆஸ்திரேலியா செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் தன்னுடைய டெல்லி அணிக்காக விளையாடிய இடது கை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதுவை ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலியா செல்ல சரியானவராக பார்க்கிறார்.

- Advertisement -

இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “ஆஸ்திரேலிய இந்திய சுற்றுப்பயணத்தில் கலில் அகமது போன்ற ஒரு பந்துவீச்சாளர் தன்னை கண்டுபிடிக்க வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் சமீபத்தில் ஜிம்பாப்வே சென்று விளையாடினார். மேலும் ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இடத்திற்கு இவர் சரியானவர் ஆக இருப்பார்.

இதையும் படிங்க : இந்திய அணியின் பங்களாதேஷ் இங்கிலாந்து தொடர்.. புது அட்டவணை அறிவிப்பு.. பிசிசிஐ விளக்கம்

மேலும் சமய அதற்குள் உடல் தகுதி பெற்று விடுவார். எப்படியும் முகமது சிராஜ் அணியில் இருக்க செய்வார். மேலும் பும்ரா எங்கும் சென்றுவிடவில்லை அவர் இந்திய அணியுடன்தான் தற்போது முழுமையாக இருக்கிறார். எனவே இந்தத் தொடரில் இரண்டு அணிகளுமே மிகவும் வலிமையான வரிசையுடன் நிற்க போகின்றன” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts