ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா என்ன செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5:30 மணிக்கு துவங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் ஒரு போட்டியை வென்று தற்போது தொடர் சமநிலையில் உள்ளதால் மூன்றாவது போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
ரோஹித் சர்மா இதை செய்திருக்க வேண்டும்
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் குறித்து பேசி இருக்கும் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது ” ரோஹித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓபனராக களம் இறங்கி இருக்க வேண்டும். முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 201 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார்கள். ஆனாலும் கூட துவக்க இடத்தில் நீண்ட நாட்கள் விளையாடி வரும் அனுபவம் கொண்ட ரோஹித் சர்மா துவக்க வீரராக இருந்திருக்க வேண்டும்”
“அவர் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய வேண்டும் என நாம் விரும்புகிறோம். ஏனென்றால் அது அவருடைய இயல்பான ரோல். மூன்றாவது டெஸ்டில் முக்கியமாக அவர்கள் நினைக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் அவரை துவக்க வீரராக மீண்டும் கொண்டு வருவதை பற்றி இதுதான்”
ரோஹித் இடத்தில் நான் இருந்தால்
மேலும் பேசிய ரிக்கி பாண்டிங் ” அவர் 12 இன்னிங்ஸில் 142 ரன்கள் கடைசியாக எடுத்து இருக்கிறார். நீங்கள் பேட்டிங் ஃபார்மில் இருக்கிறீர்களா இல்லையா என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். உங்களுடைய செயல் திறனை பற்றி உங்களுக்கு யாரும் சொல்ல வேண்டியது கிடையாது”
இதையும் படிங்க: நியூசி டெஸ்ட்.. இங்கிலாந்து பிளேயிங் XI அறிவிப்பு.. இளம் வீரருக்கு கௌரவம்.. ஸ்டோக்ஸ் புதிய முடிவு
“இது இந்திய அணிக்கு மிகப்பெரிய கவலையான விஷயமா என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் ரோஹித் இடத்தில் இருந்திருந்தால், விஷயங்களை எனக்கு வசதியாக மாற்ற முயற்சி செய்து துவக்க வீரராக வந்திருப்பேன். கேஎல்.ராகுலுக்கு மீண்டும் பேட்டிங் வரிசையில் புதிய இடத்தை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.