நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணி அதிரடியான முடிவெடுத்து புதிய பிளேயிங் லெவனை வெளியிட்டு இருக்கிறது.
தற்போது இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை என்று இங்கிலாந்து தொடரை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பென் ஸ்டோக்ஸ் புது முடிவு
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவனில் அனுபவ தேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டு அவரது இடத்தில் மேத்யூ பாட்ஸ் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர் பிளேயிங் லெவனில் இருக்கும் சக வேகப்பந்துவீச்சாளர்கள் கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ் ஆகியோரை விட சீனியர். எனவே இங்கிலாந்து வேகப் பந்து வீச்சுக்கு தலைமை தாங்கும் கௌரவம் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இவருக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறும்போது ” முன்னோக்கி செல்லும் எங்களுடைய பயணத்தில் மற்றொரு முக்கிய பெரிய வேகம் பந்துவீச்சாளரை நாங்கள் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை இது வழங்குகிறது.எப்பொழுதும் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதின் மூலம் அனுபவத்தை வழங்க விரும்புகிறோம். இதைசெய்யக்கூடிய இடத்தில் இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.
மாற்றமில்லாத பேட்டிங் யூனிட்
அதே சமயத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவனில் இங்கிலாந்து பேட்டிங் யூனிட்டில்எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனைத்து பேட்ஸ்மேன்களும் மூன்றாவது போட்டியிலும் விளையாடுகிறார்கள்.
இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் நியூசிலாந்து அணியை டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஸ் செய்ய இங்கிலாந்து விரும்புகிறது என்று தெரிகிறது. இதற்காக தங்களது அதிரடி பேட்டிங் லைன்-அப்பை தொடர்கிறது.
இதையும் படிங்க: நாளை இந்திய அணிக்கு இது நடக்கும்.. இந்த பவுலிங் பிளான் திரும்ப வரப்போகுது – கம்மின்ஸ் பேட்டி
இங்கிலாந்து பிளேயிங் XI : ஜாக் கிராலி, பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஒல்லி போப் (வி.கீ), பென் ஸ்டோக்ஸ் (கே), கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், மேத்யூ பாட்ஸ் மற்றும் ஷோயப் பஷீர்.