இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் கில் திட்டங்கள் மிகவும் சுமாராக இருந்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்திருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் தாண்டி பார்ட்னர்ஷிப் அமைத்து வலிமையான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு கேப்டன் வில் சரியாக திட்டமிடாததுதான் காரணம் என ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.
ஆடுகளம் மாறிவிட்டதா?
இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸில் தொடக்க விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது. ஆனால் இந்திய அணி மிகவும் மெதுவாக விளையாடி இந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. அதே சமயத்தில் இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் போல அதிரடியாக விளையாடி 150 ரன்கள் தாண்டி தொடக்க பார்ட்னர்ஷிப்பை அமைத்தது.
நேற்று இந்திய அணியின் பந்துவீச்சு தொடக்கத்தில் பும்ரா மற்றும் அன்சூல் காம்போஜ் இருவரும் துவங்கினார்கள். அனுபவம் வாய்ந்த முகமது சிராஜ் மூன்றாவது பவுலராக நிறுத்தி வைக்கப்பட்டார். தற்போது கில் உடைய இந்த திட்டங்கள் பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன.
எனக்கு பிடிக்கவில்லை
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “இங்கிலாந்து சிறப்பான திட்டத்துடன் பந்து வீசியதாக நான் நினைக்கிறேன். ஆனால் காம்போஜ் புதிய பந்தில் பந்து வீசி இருக்கக் கூடாது. இது எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை. டக்கெட் அடித்த முதல் ஆறு பவுண்டரிகள் ஸ்கொயர் லெக்குக்கு பின்னால் வந்தவை. எனவே இவை தந்திரோபாய ரீதியாக தவறாக இருக்கின்றன”
இதையும் படிங்க : கம்பீர் கில் செஞ்சிகிட்டு இருப்பது மோசமானது.. என்னால இதை நம்பவே முடியல – அஸ்வின் விமர்சனம்
“மேலும் பும்ரா தவறான முனையில் இருந்து பந்து வீசுகிறார் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் நிறைய விக்கெட்டுகள் ஸ்டேதம் முனையில் இருந்து விழுந்திருந்தன. ஆனால் பும்ரா ஆரம்பம் முதலே ஜேம்ஸ் ஆண்டர்சன் முனையில் இருந்து வந்து வீசுகிறார். இந்த இடத்திலும் கேப்டனாக கில் தவறு செய்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






