ஆஸி ஜெயிக்கணும்னா.. இவர் குறிப்பா அந்த இடத்துல நல்லா பெர்ஃபார்ம் பண்ணியே ஆகணும் – ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை

0
214

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய வெற்றி பெற்றிருந்த நிலையில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் தற்போது இரண்டு அணிகளும் சமமாக உள்ளன.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ள நிலையில் தற்போது இரண்டு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 28 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்ததை தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 193 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்த போதிலும் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை இங்கிலாந்து சிறப்பாக எதிர்கொண்டு விளையாடியதால் அந்த இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து வெற்றி பெற்றது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக கருதப்படும் ஆடாம் ஜம்பா நான்கு ஓவர்களில் 37 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இது ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த நிலையில் ரிக்கி பாண்டிங் இது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து பாண்டின் விரிவாக கூறும்போது “மற்ற அணிகள் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பாவை சிறப்பாக விளையாடினால் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுவது மிகவும் கடினமாகி விடுகிறது. மிடில் ஓவர்களை பொறுத்தவரை ஜம்பாதான் ஆஸ்திரேலியாவுக்கு முக்கிய துருப்பு சீட்டு. முக்கியமான நேரத்தில் எதிரணியின் பார்ட்னர்ஷிப்ளை உடைக்கவும், ரன் விகிதங்களை கட்டுப்படுத்தவும் அவரது பந்துவீச்சு பெரிய உதவியாக இருக்கும்.

ஆனால் அது இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு நடைபெறவில்லை. மேலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடினர். ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சுக்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கால்களை நகர்த்த தயாராக இருந்தனர். ஆனால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் க்ரீசை விட்டு வெளியே வந்து விளையாடியது போல எனக்கு நினைவில் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:நாங்க என்ன பாகிஸ்தான் டீமா?.. இந்தியாவை பங்களாதேஷ் அணியால் இதனால ஜெயிக்கவே முடியாது – அஜய் ஜடேஜா உறுதி

சுழற் பந்துவீச்சாளர் ஜம்பாவின் பங்களிப்பு என்பது ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் முக்கியமானது என்று பாண்டிங் இதன் மூலமாக தெரிவித்து இருக்கிறார். இன்று இரவு நடைபெற உள்ள மூன்றாவது போட்டியில் இந்த இரண்டு அணிகளும் வெற்றிக்கு போராடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே தொடரை கைப்பற்ற போவது எந்த அணி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -