இந்திய அணி தற்போது ஒரு மாதத்திற்கும் மேலான ஓய்வில்இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் பங்களாதேஷ் அணியால் இந்திய அணியை வெல்ல முடியாது என இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறியிருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு அடுத்த பத்து போட்டிகளில் பெரும்பான்மை போட்டிகளை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாக இந்திய அணிக்கு அமைந்திருக்கிறது.
பங்களாதேஷ் அணியின் பலம் என்ன?
பங்களாதேஷ் அணி கடந்த வாரத்தில் பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. முதல் முறையாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி பெற்றதோடு தொடரையும் வென்று வரலாறு படைத்தது.
பங்களாதேஷ் அணியிடம் எட்டாம் இடம் வரையில் பேட்டிங் நீளம் இருக்கிறது. மேலும் வலிமையான மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் இருக்கிறது. இத்துடன் அவர்களிடம் வழக்கம் போல் சுழல் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. தற்சமயம் புதிதாக வேகப்பந்து வீச்சும் சிறப்பானதாக அமைந்திருக்கிறது. எனவே அவர்கள் எல்லாத் துறையிலும் பலமாக இருக்கின்ற காரணத்தினால் இந்த முறை இந்திய அணிக்கு சவால் கொடுக்க முடியும் என நம்புகிறார்கள்.
இந்திய அணி பாகிஸ்தான் அணி கிடையாது
இந்தத் தொடர் குறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறும்பொழுது “ஒரு தொடரை வென்று வரும் அணி அதற்கு அடுத்த தொடரையும் வெல்ல முடியும் என்கின்ற நம்பிக்கையோடு வரும். ஆனால் தற்போது பாகிஸ்தான் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. இந்திய அணி மிகவும் சிறந்த அணியாக இருக்கிறது.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிரா ஈஸியா ஆடறனா.. நான் ரன் குவிக்க அவங்க வசதியா இருக்காங்களா? – டிராவிஸ் ஹெட் பதில்
பங்களாதேஷ் அணியின் பார்வையால் அவர்கள் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதால் இந்திய அணியை ஏன் வீழ்த்த முடியாதா? என்று நினைப்பார்கள். ஆனால் நாங்கள் சிறந்த அணி. நிச்சயமாக அவர்கள் போட்டியளிப்பார்கள். சுழல் பந்துவீச்சில் நன்றாக விளையாடுகிறார்கள். மேலும் சிறப்பாகவும் சுழல் பந்து வீச்சு வீசவும் செய்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.