இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலிய விற்கு சென்று அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கிரிக்கெட் உலகில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த டெஸ்ட் தொடரை இரண்டு அணிகளில் யார் வெல்வார்கள்? என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.
கடந்த ஐந்து முறையாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி தன் வசம் வைத்திருக்கிறார். இதில் கடைசி இரண்டு முறையாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று வந்திருக்கிறது. கடந்த சில வருடங்களில் ஆஸ்திரேலியா அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய சவாலை கொடுத்த ஒரே அணியாக இந்திய அணி இருக்கிறது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட்டை பொருத்தவரையில் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் கௌரவமான விஷயமாக நினைப்பார்கள். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் ஆசஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு உலக கோப்பையை விட முக்கியமானது. தற்பொழுது ஆசஸ் தொடர்பு போலவே ஆஸ்திரேலியாவிற்கு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரும் மாறி இருக்கிறது. எனவே இந்திய அணிக்கு எதிராக இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்த முறை அவர்கள் எல்லா விதத்திலும் தயாராகி வருகிறார்கள்.
இந்தத் தொடரை யார் கைப்பற்றுவார்கள்? என்பது குறித்து பேசி இருக்கும் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “இது சிறப்பான ஒரு போட்டித் தொடராக இருக்கும் என நான் நினைக்கிறேன். நான் ஏற்கனவே சொன்னது போலவே இந்திய அணிக்கு எதிராக வெல்வதற்கு ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு முக்கிய புள்ளி இருக்கிறது. அதாவது கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவிற்கு வந்து இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது. எனவே இந்த முறை ஆஸ்திரேலியாவிற்கு வெல்ல வேண்டும் என்பதற்கான புள்ளி இதில் கிடைத்திருக்கிறது.
மேலும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் நாம் ஐந்து போட்டிகளுக்கு வந்திருக்கிறோம். இதற்கு முன்பு நான்கு போட்டிகள் நடைபெற்றது. எனவே ஐந்து போட்டிகள் இருக்கின்ற காரணத்தினால் இது குறித்து எல்லாருமே உற்சாகமாக இருக்கிறார்கள். இதில் நிறைய டிரா போட்டிகள் இருக்குமா? என்பது குறித்து எனக்கு தெரியவில்லை.
இதையும் படிங்க : 3 ஃபார்மட்.. 1 ஸ்வீப் ஷாட்.. சூரிய குமாருக்கு செம்ம சான்ஸ்.. டிராவிட் வழியில் கம்பீர் யோசிப்பாரா?
அதே சமயத்தில் நான் இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்லும் என்று கூறுகிறேன். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நான் ஒருபோதும் கூறப்போவதில்லை.ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் மோசமான வானிலை மற்றும் சூழ்நிலை என இருக்கும். எனவே ஒரு போட்டி டிராவில் முடியலாம். மற்றபடி ஆஸ்திரேலியா அணி 3-1 எனத் தொடரை கைப்பற்றும்” என்று கூறியிருக்கிறார்.