நியூசிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் டெஸ்ட் தொடரை இந்திய அணி தோற்றத்தின் காரணமாக பிசிசிஐ பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வீரர்களின் ஓய்வு குறித்து புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருப்பதாக செய்திகள் கூறுகிறது.
தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியவிற்கு சென்று ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் நான்கு டெஸ்ட் போட்டிகளை வென்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இதையெல்லாம் தாண்டி முதலில் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை வெல்வது பெரிய மறு வருகையாக இருக்கும்.
பங்களாதேஷ் தொடர் சர்ச்சை
இந்திய அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்த ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற சிவப்புப் பந்து தொடரின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பியது. இதற்கு முன்பாக உள்நாட்டு தொடர்களில் இந்திய இளம் வீரர்கள் பங்கேற்க அனுப்பப்பட்டார்கள். ரவீந்திர ஜடேஜா பெயரும் அதில் இருந்தது.
அதே சமயத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. மேலும் பணிச்சுமை காரணமாக அஸ்வின் மற்றும் பும்ரா இருவரும் விளையாடவில்லை. மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இடம் பெற்று இருந்த ரவீந்திர ஜடேஜா திடீரென தானும் விளையாட முடியாது என விலகினார். இது அப்போது சர்ச்சையான விஷயமாக மாறியது.
பிசிசிஐ புதிய கட்டுப்பாடு
தற்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே நல்ல ஓய்வில் இருக்கும் வீரர்களுக்கு மேற்கொண்டு ஓய்வு கொடுக்கக் கூடாது என முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இது மட்டும் இல்லாமல் எந்த வீரராக இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட் விளையாடாமல் ஓய்வில் இருந்தால் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது கட்டாயமாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சச்சின் வார்னேவுக்காக எப்படி தயாரானார் தெரியுமா?.. ரோகித் விராட் நீங்க பெரிய தப்பு பண்றிங்க – கவாஸ்கர் விமர்சனம்
இதன் மூலம் இனி விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் ஓய்வு பெறும் வரையில் தேவையான அளவுக்கு உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி இந்திய கிரிக்கெட்டில் திடீர் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.