இந்திய கிரிக்கெட்

புதிய பயிற்சியாளர் பதவிக்கு அணுகிய பிசிசிஐ.. உண்மையை உடைத்த ரிக்கி பாண்டிங்.. அவரே வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பயிற்சி பயிற்சியாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரை இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியும் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அனுப்பியதாக வந்த செய்திகள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது அடுத்த மாதத்துடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்கு தகுதியும் திறமையும் கொண்ட முன்னாள் வீரர்களை தேடிக்கொண்டிருக்கிறது.

இதன் அடிப்படையில் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இடம் இந்திய கிரிக்கெட் வாரியம் அணுகியதாக செய்திகள் வந்தது. மேலும் நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் மற்றும் இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

டி20 லீக்கில் ஒரு அணிக்கு பயிற்சியாளராக இருப்பது ஒன்று முதல் இரண்டு மாதங்கள் மட்டுமே வேலை செய்தால் போதுமாகும். ஆனால் ஒரு தேசிய அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் பொழுது நீங்கள் குறைந்தபட்சம் 10 மாதங்கள் கிரிக்கெட் வீரர்களைப் போல பணிவுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது குறித்து பேசி இருக்கும் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “நான் இந்த விஷயங்கள் தொடர்பாக நிறைய அறிக்கைகளை வெளியில் பார்த்தேன். இப்படியான விஷயங்கள் சமூக வலைதளங்களில் நிறைய பரவும். ஆனால் ஐபிஎல் நடந்து கொண்டிருந்த பொழுது இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து சில பேச்சுவார்த்தைகள் நடந்தது என்பது உண்மைதான்.

இதையும் படிங்க : தோனி இந்த முறை கேப்டனா இருந்திருந்தா.. நடந்த கதையே வேறயா இருந்திருக்கும் – ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி

நான் ஒரு தேசிய அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன்தான், ஆனால் என் வாழ்க்கையில் உள்ள மற்ற விஷயங்கள் மற்றும் குடும்பத்துடன் இருக்கவும் விரும்புகிறேன். தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக தொடர்வதற்கு வருடத்தில் 10 மாதங்கள் செலவிட வேண்டும். ஆனால் தற்போது எனக்குள்ள பொறுப்புகளில் என்னால் ஒரு தேசிய அணிக்கு பயிற்சியாளராக இருக்க முடியாது. நான் இப்போது ஈடுபட்டுள்ள வேலை மற்றும் பொறுப்புகளில் ரசித்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Published by