ஐபிஎல் 2025.. வெளிநாட்டு வீரருக்கு தடை ஓகே.. ஆனா அவங்களுக்கு இந்த நீதியும் கொடுங்க – அஸ்வின் கோரிக்கை

0
177
Ashwin

அடுத்த ஆண்டு 18 ஆவது ஐபிஎல் சீசன் மெகா ஏலத்துடன் நடைபெற இருக்கிறது. எனவே ஒவ்வொரு அணிக்கும் எத்தனை வீரர்கள் தக்க வைக்க அனுமதிக்கப்படுவார்கள்? மேலும் ஆர்டிஎம் முறை மீண்டும் கொண்டு வரப்படுமா? என்பது குறித்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பெரிய அணிகள் எட்டு வீரர்களை தக்கவைக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டிருந்தார்கள். ஆனால் சிறிய அணிகள் நான்கு வீரர்களுக்கு மேல் தக்க வைக்க கொடுக்கக் கூடாது என கூறியிருந்தார்கள். இது அணி உரிமையாளர்கள் கூட்டத்தில் பெரிய விவாதமாக மாறியதாக கூறப்பட்டது.

- Advertisement -

மேலும் முன்பு ஐபிஎல் ஆர்டிஎம் முறை இருந்தது. ஆர்டிஎம் முறை என்பது, ஒரு அணி தங்கள் அணியில் இருந்து விடுவித்த வீரரை, இன்னொரு அணி ஏலத்தில் வாங்கிய பிறகு, என்ன விலைக்கு அவர்கள் வாங்கினார்களோ, அதே விலைக்கு ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி வாங்கிக் கொள்ள முடியும். உதாரணமாக சிஎஸ்கே அணி சிவம் துபேவை வெளியில் விட்டு, அவரை மும்பை இந்தியன்ஸ் ஆறு கோடிக்கு வாங்கி விட்டால், உடனே ஆர்டிஎம் முறையால் அதை ஆறு கோடிக்கு அவரை வாங்கிக் கொள்ள முடியும்.

இந்த நிலையில் வருகின்ற ஐபிஎல் தொடரில் மெகா ஏலத்தில் கலந்து கொள்ளாமல், மினி ஏலத்தில் கலந்து கூடுதல் விலையை பெறுவதை சில வெளிநாட்டு வீரர்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அடுத்து குறைந்த விலைக்கு சென்றால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிக் கொள்கிறார்கள். இப்படி விலகிக் கொள்ளும் வீரர்களுக்கு தடை விதிக்க இந்த ஆண்டு விதி வரும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “இந்த முறை நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் எனவும், இரண்டு அல்லது மூன்று வீரர்களை ஆர்டிஎம் முறையில் வாங்கிக் கொள்ளலாம் எனவும் விதிகள் கொண்டுவரப்படும் என்று நினைக்கிறேன். அதே சமயத்தில் ஆர்டிஎம் முறையில் வீரர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான விலையை இழக்க வேண்டிய நிலை இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : தமிழ்நாட்டு தொடரில் இஷான் கிஷான்.. கேப்டன் பொறுப்பும் கிடைத்தது.. இந்திய அணிக்கு திரும்புவாரா?

ஐபிஎல் ஏலத்தில் குறைந்த விலைக்கு போய், அதனால் ஐபிஎல் தொடரில் விளையாடாமல் புறக்கணிக்கும் வீரர்களை தடை செய்வதற்கு விதிகள் வருகின்றது. இதே போல ஆர்டிஎம் முறையால் சரியான விலை கிடைக்காத வீரர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். எனவே ஒரு வீரரை ஆர்டிஎம் முறையில் எடுக்க வேண்டுமென்றால், அவருக்கென்று ஒரு நியாயமான ஆர்டிஎம் விலையை ஏலத்திற்கு முன்பாகவே நிர்ணயம் செய்ய வேண்டும். அந்த விலைக்கு அவரை தேவைப்பட்டால் அந்த அணி வாங்கிக் கொள்ளலாம். இதுவே அந்த வீரருக்கு செய்யும் நியாயமாக இருக்கும்” எனக் கூறியிருக்கிறார்.