எங்க ஆஸி வீரர்கள் இல்லை.. 3 ஃபார்மேட்லயும் பெஸ்ட் பவுலர் இந்த 30 வயது வீரர் தான்- ரிக்கி பாண்டிங் பேட்டி

0
101

இந்திய கிரிக்கெட் அணி 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு டி20 உலக கோப்பை ரோகித் சர்மா தலைமையில் வென்று மீண்டும் வரலாறு படைத்தது. அடுத்ததாக 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் மீது இந்திய அணி தனது கவனத்தை செலுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங் இந்திய வீரர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இன்றைய நவீன கிரிக்கெட்டின் காலகட்டத்தில் அரிதிலும் அரிதாக கிடைத்திருக்கும் இந்தியாவின் மிகத் தரமான வேகப்பந்து வீச்சாளராக 30 வயதான பும்ரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இந்திய அணி எப்போதெல்லாம் இக்கட்டான சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்கிறதோ அப்போதெல்லாம் இந்தியாவை தனது பந்து வீச்சின் மூலம் மீட்டெடுத்துக் கரை சேர்ப்பார். இதற்கு சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் தென் ஆப்பிரிக்க அணிக்கு தேவைப்பட, தனது இரண்டு அபாரமான ஓவர்கள் மூலம் போட்டியை திரும்பவும் இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார். இந்திய அணி உலக கோப்பையை வெல்ல இவரது பந்துவீச்சு ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. டி20 கிரிக்கெட் மட்டுமல்லாமல் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலும் தரமான பந்துவீச்சாளராக திகழ்ந்து வரும் பும்ரா குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து பாண்டிங் விரிவாக கூறும்போது “நான் இதனை நீண்ட காலமாக சொல்லி வருகிறேன்.பும்ரா மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக உலக கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.இத்தகைய வீரர்களின் உண்மையான திறமையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு மிகச் சிறந்த வழி பிற வீரர்களிடம் கேட்பதாகும். நீங்கள் அவரைப் பற்றி எதிரணி பேட்ஸ்மேன்களிடம் பேசும் போது, இல்லை அவர் ஒரு கனவு மாதிரியான வீரர் என்று கூறுவார்கள்.

என்ன நடக்கப் போகிறது என்று உங்களுக்கு தெரியாது. ஒரு பந்தை ஸ்விங் செய்து வீசுவார். மற்றொரு பந்தை இன்ஸ்விங்கராக வீசுவார். மற்றொரு பந்தை அவுட் ஸ்விங்கராக வீசுவார். இந்த வகையான பந்துகளை வீசுவதற்கு அவரிடம் நிலையான நிலைத்தன்மை இருக்கிறது. அவரது திறமையும் அவர் பெற்றிருக்கும் நிலை தன்மையும் உங்களுக்கு கிடைத்தால் நீங்களும் மிகச்சிறந்த வீரராக வலம் வருவீர்கள் என்று பாண்டிங் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட்.. 2025 ஐபிஎல் ஏலத்தில் வர முடியாது.. இதுதான் காரணம்

மேலும் பும்ரா காயத்திலிருந்து மீண்டு வந்து தற்போது சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் விதம் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது என்றும் கூறுகிறார். பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற உள்ள கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -