கான்ஸ்டாஸ் பும்ரா கிட்ட போன மாதிரி ஆடினா நிலைக்க முடியாது.. இத செய்தே ஆகணும் – ரிக்கி பாண்டிங் அறிவுரை

0
321
Ponting

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு இளம் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமாகி இருக்கும் சாம் கான்ஸ்டாஸ் அவருடைய வழியில் விளையாடினால் சர்வதேச கிரிக்கெட்டில் நிலைக்க முடியாது என ரிக்கி பாண்டிங் அறிவுரை கூறியிருக்கிறார்.

தற்போது 19 வயதாகும் சாம் கான்ஸ்டாஸ் பேட்டிங் மிகவும் அச்சமற்ற முறையில் இருக்கிறது. பும்ராவுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்கூப் விளையாடி ஆச்சரியப்படுத்தினார். மேலும் அவரது பேட்டிங் போலவே களத்தில் அவருடைய நடவடிக்கையும் யாருக்கு எதிராகவும் எதிரணியிடம் அச்சமற்றதாகவே இருக்கிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான வீரராக மாறி இருக்கிறார்.

- Advertisement -

நியூ சவுத் வேல்ஸ் இளம் கதாநாயகன்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்திருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பாக, ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் டேவிட் வார்னர் இடத்தில் யாரை கொண்டுவருவது? என்ற பல பேச்சுகள் சென்று கொண்டு இருந்தது. அப்பொழுது இவரது பெயர் பலராலும் கூறப்பட்டாலும் இவர் தேர்வு செய்யப்படவில்லை.

ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு கிரிக்கெட்டில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திற்காக இரண்டு முக்கிய சதங்களை அடித்து எல்லோரது கவனத்தையும் கவர்ந்தார். மேலும் ஆசிரியர் பிரதமர் லெவன் அணிக்காக இந்திய அணிக்கு எதிரான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் மீண்டும் அதிரடியான ஒரு சதத்தை அடித்து, ஆஸ்திரேலியா அணியில் அதிரடியாக இடம் பிடித்து அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் கூறிய முக்கிய அறிவுரை

இந்த நிலையில் சாம் கான்ஸ்டாஸ் குறித்து பேசி இருக்கும் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “கான்ஸ்டாஸ் எல்லா நேரத்திலும் அதிரடியாக விளையாடி ஒரு டெஸ்ட் துவக்க ஆட்டக்காரராக நிலைக்க முடியும் என்று நான் நம்பவில்லை. மேலும் அவர் விளையாடி இருக்கும் இரண்டு போட்டிகளில் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருப்பார். ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக அவர் இன்னுமே நிறைய கற்றுக் கொள்வார். அவருக்கு ஒரு பெரிய மேடை கிடைத்தது அதை மெல்போர்ன் மைதானத்தில் ரசித்து விளையாடினார்”

இதையும் படிங்க : யுவராஜ் சிங்கை விராட் கோலி மரியாதையாக நடத்தவில்லை.. அவர் இப்படித்தான் இருந்தார் – ராபின் உத்தப்பா பேச்சு

“இளம் வீரர்களுக்கு இப்படி நடப்பதை நான் நிறைய பார்த்திருக்கிறேன். அவர்கள் அணிக்குள் வருகிறார்கள் திடீரென பயமுறுத்துகிறார்கள். பின்பு அங்கிருந்து அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு மேல்மட்ட கிரிக்கெட் புரிவதற்கு சில போட்டிகள் மற்றும் சில தொடர்கள் தேவைப்படுகிறது. அதிலிருந்து அவர்கள் வெற்றிகரமான சர்வதேச வீரர்களாக வர முடியும்” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -