53 வருடத்தில் முதல் முறை.. ஸ்மித் கேப்டனாக சாதனை.. இங்கிலாந்துக்கு எதிராக ஆஸி 2 மாஸ் ரெக்கார்டுகள்

0
146
Smith

ஆஸ்திரேலியா அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-2 எனக்கு கைப்பற்றியது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா இரண்டு சிறப்பு சாதனையை தங்களது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் படைத்திருக்கிறது.

இங்கிலாந்து உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் விளையாட தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் முடிந்தது. இதற்கு அடுத்து நடந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இழந்திருக்கிறது.

- Advertisement -

சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்

இந்த தொடரில் ஆஸ்திரேலியா சுழல் பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள். பிரதான சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா மொத்தமாக எட்டு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். அதே சமயத்தில் பகுதி நேர பந்துவீச்சாளர்களான லபுசேன் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்துவதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா அணி தன்னுடைய 53 வருட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இரு நாடுகளுக்கு இடையே ஆன ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சுழல் பந்துவீச்சாளர்கள் மூலம் 20 விக்கெட்டுகள் தாண்டி 23 விக்கெட்டுகள் கைப்பற்றி தனிச் சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்பு 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சுழல் பந்துவீச்சாளர்கள் 19 விக்கெட் கைப்பற்றியது இந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சாதனையாக இருந்தது.

- Advertisement -

கேப்டனாக ஸ்மித் தேடித் தந்த சாதனை

நேற்று நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஸ் விளையாடவில்லை. இந்த நிலையில் ஸ்மித் கேப்டனாக ஆஸ்திரேலியா அணியை வழிநடத்தினார். அதே சமயத்தில் ஆடுகளம் சுழல் பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பதை வேகமாக கண்டுபிடித்த அவர் 30-கும் மேற்பட்ட ஓவர்களே சுழல் பந்துவீச்சாளர்களை வீச வைத்தார்.

இதையும் படிங்க : 156 கி.மீ வீசுவேனு ஐபிஎல்லதான் தெரியும்.. லக்னோ டீம்ல ஒருநாள் அது நடந்தது – மயங்க் யாதவ் பேட்டி

2019 ஆம் ஆண்டு சார்ஜாவில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 32 ஓவர்களை சுழல் பந்துவீச்சாளர்கள் மூலம் வீசியிருந்தது. ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓவர்களை சுழல் பந்துவீச்சாளர்கள் மூலம் வீசிய போட்டியாக இது இருந்தது. இந்த நிலையில் நேற்று இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேப்டன் ஸ்மித் 32.2 ஓவர்கள் சுழல் பந்துவீச்சாளர்களை வீசவைத்து இந்த வகையில் புது சாதனையை படைத்தார்!

- Advertisement -