ரிங்கு நீ தனியாக இல்லை.. மொத்த அணிக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்.. இதை போய் செய்யுங்க – கம்பீர் பேச்சு

0
12
Gambhir

இந்திய அணிக்கு கடந்த வெஸ்ட் இண்டீஸ் போட்டி வாழ்வா சாவா போட்டியாக அமைந்திருந்தது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி வெற்றி பெற்று செமி பைனலுக்கு தகுதி பெற்றது. தற்போது இந்த போட்டிக்கு முன்பாக அணி வீரர்களிடம் பயிற்சியாளர் கம்பீர் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.

மேலும் ரிங்கு சிங் தன் தந்தை இறந்த போதும் உடனடியாக அணிக்கு திரும்பி வந்திருந்தார். மேலும் அவர் மிகவும் சீரியஸ் கண்டிஷனில் இருந்த பொழுதும் சென்னையில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கு உடனடியாக திரும்பி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நீங்கள் தனியாக இல்லை

இந்த நிலையில் மிகவும் அழுத்தமான போட்டியான வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்களிடம் கம்பீர் மிகவும் சிறப்பான பேச்சை வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னுடைய வீரர்கள் எப்படி விளையாட வேண்டும் என்று அவர் தைரியமான முறையில் பேசி இருக்கிறார்.

இந்த வீடியோவில் கம்பீர் பேசும் பொழுது “ரிங்கு, இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் மீண்டும் அணியில் வந்து இணைவதற்கு பெரிய கேரக்டர் தேவை. ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் தனியாக இல்லை, முழு அணியும் உங்களோடு உள்ளது. எனவே நீங்கள் வலுவோடு இருங்கள்”

- Advertisement -

இப்படித்தான் ஆட வேண்டும்

“நண்பர்களே அழுத்தம் இருக்கிறது என்பது உண்மை. எப்பொழுதும் நாம் அதிலிருந்து ஓடி ஒளிய கூடாது அழுத்தத்தை அரவணைக்க வேண்டும். அதை நேருக்கு நேர் எதிர் கொள்ள வேண்டும். ஒரு சூழலில் அழுத்தத்தில் இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக பாசிட்டிவான ஒரு முடிவை எடுக்க வேண்டும். நீங்கள் இப்படிப்பட்ட ஒரு போட்டியை விளையாடத்தான், இந்த விளையாட்டை தேர்வு செய்தீர்கள். இதற்காகவே பயிற்சி எடுத்தீர்கள். சொந்த மைதானத்தில் நாக் அவுட் போட்டியில் விளையாடத்தான் நீங்கள் உருவாகினீர்கள்”

இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் தப்பு செஞ்சிருக்காரு.. ஆனா அதுக்கு காரணம் கம்பீர் முடிவுதான்.. இனி அது வேண்டாம் – பாலாஜி வேண்டுகோள்

“அதனால் அடுத்த 40 ஓவர் களுக்கு எப்பொழுதும் அழுத்தத்தில் இருக்கிறோம் என்று நினைக்காமல் நீங்கள் உற்சாகமாக களத்திற்கு செல்லுங்கள். நீங்கள் அழுத்தமாக இருப்பதை உணர்ந்தால் உடனடியாக பாசிட்டிவான ஒரு முடிவை எடுங்கள். தைரியமாக இருங்கள் துணிவுடன் விளையாடுங்கள். நாட்டுக்காகவும் அதே சமயத்தில் ஒருவருக்கொருவருக்காகவும் விளையாடுவதற்காக மகிழுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -