GT20.. சூப்பர் ஓவரில் ஆட மறுத்த ஷாகிப்.. வெளியேற்றப்பட்ட பங்களா டைகர்ஸ் அணி.. நடுவர் எடுத்த சர்ச்சை முடிவு

0
646
Shakip

தற்போது கனடாவில் குளோபல் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இதில் பங்களா டைகர்ஸ் அணியின் கேப்டனாக ஷாஹிப் அல் ஹாசன் விளையாடுகிறார். இந்த நிலையில் எலிமினேட்டர் சுற்றில் சூப்பர் ஓவரில் நடுவர் விளையாட சொல்லி வற்புறுத்த ஷாகிப் அல் ஹசன் அதை மறுத்துவிட்டார். இந்த நிலையில் அவருடைய பங்களா டைகர்ஸ் அணி எலிமினேஷன் செய்யப்பட்டது.

கனடா குளோபல் டி20 லீக் தொடரில் எலிமினேட்டர் சுற்று போட்டியில் பங்களா டைகர்ஸ் மற்றும் டொரன்டோ நேஷனல்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியின் நடைபெற இருந்தது. இந்த போட்டியில் வெல்லும் அணி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தப் போட்டி முழுவதுமே மழை பெய்து ஆட்டம் முழுதாக நிறுத்தப்பட்டது. எனவே இந்தப் போட்டிக்கான நடுவர் வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு சூப்பர் ஓவரில் விளையாடும் படி இரு அணிகளையும் கேட்டுக் கொண்டார். ஆனால் பங்களா டைகர் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த தொடரின் லீக் சுற்றில் பங்களா டைகர்ஸ் அணி சிறப்பாக விளையாடி நான்கு போட்டிகளை வென்று பிளே ஆப் சுற்றுக்கு வந்தது. மேலும் எதிர்த்து விளையாட வேண்டிய டொரன்டோ நேஷனல்ஸ் அணியை விட சிறப்பான செயல்பாட்டை கொண்டிருந்தது. இதன் காரணமாக இதன் அடிப்படையில் தங்கள் அணியை தகுதி சுற்றில் விளையாட அனுமதிக்க வேண்டும் என ஷாகிப் அல் ஹசன் கேட்டார். ஆனால் நடுவர் இதற்கு சம்மதிக்கவில்லை.

அதே சமயத்தில் ஒரு டி20 போட்டியை குறைந்தது 5 ஓவர்களுக்கு நடத்த வேண்டும். ஒரு ஓவர் கொண்டு நடத்த முடியாது. இதேபோல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான முதல் தகுதிச் சுற்றில் இதே போல் மழை தொடர்ந்து பெய்த காரணத்தினால், லீக் சுற்றில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடித்திருந்த மான்ட்ரியல் டைகர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்தடுத்து 5 சிக்ஸ்.. ரசித் கான் ஓவரில் அடிக்க.. இந்த 2 விஷயம்தான் காரணம்.. – பொல்லார்டு விளக்கம்

இப்படியான நிலையில் இதே முறையில் தங்கள் அணியையும் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என பங்களா டைகர் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கேட்டுக்கொண்டார். அவர் கோரிக்கை நியாயமாக இருந்த பொழுதிலும் நடுவர் இதை ஏற்கவில்லை. எனவே ஷாகிப் அல்ஹசன் தங்கள் அணி சூப்பர் ஓவரில் விளையாடாது என அறிவித்துவிட்டார். இதன் காரணமாக அவருடைய அணியான பங்களா டைகர்ஸ் எலிமினேஷன் செய்யப்பட்டது. டொரன்டோ நேஷனல்ஸ் அணி இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.