நேர்ல பார்த்து இருக்கேன்.. கம்பீர் கம்மியா பேசுவார்.. ஆனா அந்த 2 விஷயத்தை கட்டாயம் செய்வார் – ஆவேஷ் கான் பேட்டி

0
117
Gambhir

தற்போது இந்திய கிரிக்கெட்டில் டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற வீரர்களை விட, புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பற்றிய பேச்சுகள் தான் மிக அதிகமாக இருந்து வருகிறது. பயிற்சியாளர் பொறுப்பில் அவர் எப்படியானவர் என்பது குறித்து நேரடி அனுபவம் இருக்கும் இந்திய வீரர் ஆவேஸ் கான் பேட்டி அளித்திருக்கிறார்.

இந்தியா அணி வருகின்ற ஜூலை 27ஆம் தேதி இரண்டு வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. கம்பீர் இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பு எடுத்துக் கொள்கிறார். அதற்கு முன்பாகவே இந்த தொடர் காண அணித்தேர்வு பற்றி ஆலோசனை செய்ய தேர்வு குழுவுடன் இணைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தற்பொழுது கம்பீர் குறித்து அவரது பயிற்சியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் விளையாடிய ஆவேஸ் கான் கூறும் பொழுது ” நான் கம்பீர் ஸாரிடம் இருந்து கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயம் என்னவென்றால்,உங்கள் எதிராளியை சிறப்பாக வீழ்த்தவும், நீங்கள் அதற்காக 100% கொடுப்பதற்கும் எப்பொழுதும் சரியான மனநிலையுடன் இருப்பதைப் பற்றியதுதான்.

அணிக் கூட்டங்களிலும் ஒருவரை ஒருவரை சந்தித்துக் கொள்ளும் பொழுதும் கம்பீர் மிகக் குறைவாகப் பேசுவார். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் சொல்வார். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வேலைகளையும் அவர்களுக்கான ரோல்களையும் கொடுப்பார். அவர் டீம் வெற்றி பெற விரும்புகிறார். அவர் எப்பொழுதும் டீம் பயிற்சியாளராக இருந்து வருகிறார். மேலும் அனைவரும் 100% வழங்க வேண்டும் என்று நினைப்பார்.

- Advertisement -

பும்ரா பற்றி சொல்ல வேண்டும் அவர் விராட் பாய் சொல்லியது போல ஒரு தலைமுறையின் பந்துவீச்சாளர்.அவரது பந்துவீச்சு பாணியும் மனநிலையும் வேறு விதமானது. முக்கியமான விஷயம் என்னவென்றால் இறுதிக்கட்டத்தில் பந்து வீசுவதும், அதற்காக அவர் மேற்கொள்ளும் பயிற்சிகளும் ஆகும்.

இதையும் படிங்க : என் ஒவ்வொரு பந்திலும்.. இந்த இந்திய வீரரை அவுட் ஆக்க முடியும் என்று நினைத்தேன்.. ஆனால் இப்போ அது முடியாது- ஆண்டர்சன் பேட்டி

நான் அவரிடம் பேசும் போதெல்லாம் இறுதிக்கட்டத்தில் பந்து வீசுவதற்கான விஷயத்தில்கவனம் செலுத்துங்கள் என்று கூறுவார். நீங்கள் யார்க்கரை வீச நினைத்தால் அது முழுமையாக அப்படியே இருக்க வேண்டும். அது ஃபுல் டாஸ் ஆகவோ அல்லது ஆஃப் வாலியாகவோ இருக்கக் கூடாது. இதேபோல்தான் பவுன்சருக்கும் அவர் கூறுவார்”என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -