அடுத்த ஆஸி சூப்பர் ஸ்டார்.. 26 வயதில் ஓய்வு பெற போகும் சோகம்.. வினோத பின்னணி காரணம்.. வெளியான தகவல்கள்

0
513
Pucovski

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட வில் புஸ்வ்ஸ்கி தன் பேட்டிங்கில் இருந்த சில பிரச்சனைகளால் ஏற்பட்ட மருத்துவ காரணங்களால் 26 வயதிலேயே ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட்டில் 2016 ஆம் ஆண்டு ஜேம்ஸ் டெய்லர் இளம் வயதிலேயே இதய பிரச்சினை காரணமாக ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இப்படியான முறையில் ஆஸ்திரேலியா எதிர்கால நட்சத்திர வீரர் ஒருவர் ஓய்வு பெற இருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

வினோத பிரச்சனை

தற்போது 26 வயதாகும் வில் புஸ்கவ்ஸ்கி ஆஸ்திரேலிய உள்நாட்டு கிரிக்கெட்டில் பிரபலமான விக்டோரியா அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் இவர் இந்திய அணிக்கு எதிராக 2021 ஆம் ஆண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் சிட்னி மைதானத்தில் அறிமுகமானார். இவர் தன்னுடைய அறிமுக போட்டியில் 62 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் நவ்தீப் ஷைனி பந்துவீச்சு ஆட்டம் இழந்தார்.

இவருக்கு வினோதமாக ஷார்ட் பந்தை விளையாடுவதில் பெரிய தடுமாற்றம் இருக்கிறது. இதன் காரணமாக நிறைய முறை இந்த பந்தை விளையாடச் சென்று ஹெல்மெட்டில் இவருக்கு பந்து தாக்கி இருக்கிறது. இது சமீப காலத்தில் இவர் விளையாடும் ஒவ்வொரு முறையும் செய்தியாகி வந்தது. இந்திய ஏ அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் கார்த்திக் தியாகி பந்துவீச்சிலும் பந்து தாக்கி காயம் அடைந்திருந்தார். இது இவருக்கு நிற்காமல் தொடர்ந்து வந்தது.

- Advertisement -

மருத்துவ அறிக்கை

இப்படி அடிக்கடி ஷார்ட் பந்தை விளையாட சென்று ஹெல்மெட்டில் பந்து தாக்கியதால் இவருக்கு அதிகப்படியான மூளை அதிர்வு ஏற்பட்டு இருப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு சுயாதீன குழு இவரை மூன்று மாதங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும்படி அறிவுறுத்தி இருக்கிறது. தற்போது இதற்கான முறையான அறிவிப்பு விக்டோரியா அணி மற்றும் இவரது குழுவிடமிருந்து வர வேண்டியது மட்டுமே பாக்கி ஆக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : புத்தகம் கையுமா ஸ்கூலுக்கும் போய்ட்டு.. கிரிக்கெட்டும் ஆடுவது இப்படிதான்.. தென் ஆப்பிரிக்கா வீரர் மபாகா பேட்டி

டேவிட் வார்னர் ஓய்வு பெற்ற நிலையில் அவருடைய இடத்திற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பெயர்தான் உறுதியாக இருந்தது. அதே சமயத்தில் ஸ்மித் போல மூன்று வடிவத்திலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிர்காலத்தில் உருவாகி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான நிலையில்தான் 26 வயதிலேயே இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரலாம் என்கின்ற சோகமான செய்தி வெளி வந்திருக்கிறது.

- Advertisement -