கில் ரிசப் பண்ட் உடன் கோலி லண்டன் வீட்டில் ஆலோசனை.. ஓய்வு முடிவு வாபஸ்?.. என்ன நடந்தது?

0
785
Virat

விராட் கோலி தனது லண்டன் வீட்டில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ரிஷப் பண்ட் இருவரையும் சந்தித்து இரண்டு மணி நேரம் ஆலோசனை செய்ததாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் திடீரென இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள். இது இந்திய டெஸ்ட் அணியை திடீரென அனுபவமற்றதாக மாற்றி விட்டது.

- Advertisement -

விராட் கோலி கண்காணிப்பார்

இந்த நிலையில் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டாலும் கூட இந்திய இளம் டெஸ்ட் அணியை இங்கிலாந்தில் இருந்து தேவையான அளவிற்கு கண்காணிப்பார் என செய்திகள் தெரிவிக்கிறது. இங்கிலாந்தில் தன்னுடைய அனுபவத்தை இளம் கேப்டன் உடன் பகிர்வதில் அவர் ஆர்வமாக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த முறை விராட் கோலி தலைமையில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி இரண்டு என டெஸ்ட் தொடரை டிரா செய்திருந்தது. அதே சமயத்தில் இந்திய அணி பந்துவீச்சில் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு, இங்கிலாந்து அணிக்கு அதன் சொந்த மண்ணில் பெரிய சவாலை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

திடீர் சந்திப்பு

இந்த நிலையில் விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் வில் மற்றும் துணை கேப்டன் ரிஷப் பண்ட் இருவரையும் திடீரென லண்டனில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்ததாகவும், இருவரும் விராட் கோலியின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு சென்றதாகவும் செய்திகள் கூறுகிறது.

இதையும் படிங்க : இந்திய அணி டெஸ்ட் கேப்டன் பொறுப்பு.. முதல் முறையாக மவுனத்தை கலைத்த பும்ரா.. விவரம்

மேலும் விராட் கோலி அணியை எப்படி கேப்டனாக இருந்து ஒன்றாக திரட்டுவது, இங்கிலாந்தில் என்ன மாதிரியான சவால்கள் இருக்கும் என்பது குறித்து கில் மற்றும் ரிஷப் பண்ட் இருவருடனும் நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும், ஏறக்குறைய இந்த சந்திப்பு மிக நீண்டதாக இரண்டு மணி நேரங்கள் நடைபெற்றதாகவும் செய்திகள் கூறுகிறது. இன்று இந்திய அணிக்கு பயிற்சியில் ஓய்வு நாள் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -