இந்திய அணி டெஸ்ட் கேப்டன் பொறுப்பு.. முதல் முறையாக மவுனத்தை கலைத்த பும்ரா.. விவரம்

0
158

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, ரோஹித் சர்மா பதவி விலகிய பிறகு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்துவதற்கான பந்தயத்தில் முதல் இடத்தில் இருந்தார். அவர் ஏற்கனவே துணைக் கேப்டனாக இருந்ததாலும், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இரண்டு போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டதாலும், அவரை கேப்டனாக நியமிப்பது எளிதான முடிவாகத் தோன்றியது.

ஆனால், பிசிசிஐ தேர்வுக்குழு சுப்மன் கில்லை அணியின் கேப்டனாக அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கில், இங்கிலாந்து தொடருடன் தனது முதல் டெஸ்ட் கேப்டன்ஷி பணியைத் தொடங்கவுள்ளார். இந்த சுற்றுப்பயணம் ஜூன் 20 முதல் லீட்ஸில் தொடங்குகிறது.

- Advertisement -

பிசிசிஐயிடம் கூறியதே நான் தான்:

முன்னதாக, பும்ரா தம்மை ஏன் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக பிசிசிஐ அறிவிக்கவில்லை என்பது குறித்து வெளிப்படையாகப் பேசி உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “ரோஹித் மற்றும் விராட் ஓய்வு பெறுவதற்கு முன்பு, ஐபிஎல் சமயத்தில், நான் பிசிசிஐ-யிடம் பேசினேன்.”

“ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பணிச்சுமை குறித்து நான் எனது மருத்துவக்குழுவினருடன் கலந்துரையாடியதாகக் கூறினேன். நாங்கள் சற்று புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். பின்னர் நான் பிசிசிஐயை அழைத்து, தலைமைப் பொறுப்புக்கு என்னை பரிசீலிக்க வேண்டாம் என்று கூறினேன்.”

- Advertisement -

பொறுப்பை மறுத்துவிட்டேன்:

“ஏனெனில் நான் எல்லா டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முடியாது. பிசிசிஐ என்னை தலைமைப் பொறுப்புக்கு பரிசீலித்தது, ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஏனெனில், ஒருவர் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிவிட்டு, மற்ற போட்டிகளுக்கு வேறு ஒருவர் தலைமை ஏற்பது அணிக்கு நியாயமாக இருக்காது. நான் அணியை முதலிடத்தில் வைத்து முடிவு செய்தேன்” என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: 45-3 டு 293-3.. மாஸ் காட்டிய பங்களாதேஷ் ஜோடி.. சொந்த மண்ணில் இலங்கை பரிதாபம்.. முதல் டெஸ்ட்

இந்திய அணி இங்கிலாந்து தொடரில் முக்கியமான போட்டிகளை வெல்வதற்கு பந்துவீச்சில் பும்ரா சிறப்பாக பங்களிக்க வேண்டும். மேலும், 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பொறுத்தவரை எதிர்காலத்திலும் அவர் சிறந்த நிலையில் இருக்க வேண்டும்.இங்கிலாந்து தொடர் ஜூன் 20 முதல் லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் முதல் டெஸ்ட்டுடன் தொடங்குகிறது. இதில் பும்ரா பங்கேற்பார் என தெரிகிறது.

- Advertisement -