இந்திய கிரிக்கெட்

ரோகித்தை தொடர்ந்து.. விராட் கோலிக்கும் வித்தியாசமாக கட்டம் கட்டிய பிசிசிஐ.. வெளியான புதிய தகவல்கள்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கூடிய விரைவில் ஓய்வு பெறுவார் எனவும், பிசிசிஐ அதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி இருக்கிறது என்றும் செய்திகள் தெரிவிக்கிறது.

- Advertisement -

நேற்று திடீரென இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது ஓய்வை அறிவித்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு அனைவருக்குமே அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.

பிசிசிஐ அதிரடிக்கு காரணம் என்ன?

இந்திய டெஸ்ட் அணி ஐசிசி தரவரிசை பட்டியலில் தற்பொழுது நான்காவது இடத்திற்கு கீழே சென்று விட்டது. உள்நாட்டில் நியூசிலாந்துக்கு எதிராகவும் வெளிநாட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இந்திய அணி படுதோல்வி அடைந்தது இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த படுதோல்விகளுக்கு சீனியர் வீரர்களின் செயல்பாடுகள் சரியாக இல்லாததும் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே இங்கிருந்து புதிய இந்திய டெஸ்ட் அணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே அதிரடியான முடிவுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்து வருகிறது.

- Advertisement -

விராட் கோலிக்கு போட்ட ஸ்கெட்ச்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் விராட் கோலியின் கூடிய விரைவில் ஓய்வு பெறுவதற்கான சூழ்நிலையை இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்படவில்லை என்றால் அவரும் ஓய்வை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : ரோகித் ஓய்வு பெற இதுதான் காரணம்.. கம்பீர் அகர்கர் வேலையை காட்டிட்டாங்க – சேவாக் பேச்சு

ஒரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள் மொத்தம் இரண்டு ஆண்டுகள் நடைபெறுகின்ற காரணத்தினால் மூத்த வீரர்களை தொடர்ந்து எடுத்துச் செல்வதில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பிரச்சனை இருக்கிறது. இதன் காரணமாக விராட் கோலியாக இருந்தாலும் கடைசி வாய்ப்பை வழங்கி, அதில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் உடனடியாக நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பது தெரிகிறது!

- Advertisement -
Published by

Recent Posts